ஆசிரமத்தில் மாணவி தற்கொலை! காரணம் என்ன?

பரிகாரம் செய்வதற்காக ஆசிரமத்தில் தங்கியிருந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 18, 2022, 07:29 AM IST
ஆசிரமத்தில் மாணவி தற்கொலை! காரணம் என்ன? title=

திருவள்ளூரை அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(45) - நிர்மலா தம்பதியர். இவர்களுக்கு 20 வயதில் ஹேமமாலினி என்ற மகள் இருக்கிறார்.  ஹேமமாலினி திருவள்ளூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.   இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன் உடல்நிலை சரி இல்லாமல் போனதையடுத்து இவரது பெற்றோர் வெள்ளாத்துக் கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கோயிலில் உள்ள முனுசாமி என்கிற பூசாரியை அணுகியுள்ளனர்.  அந்த பூசாரி ஹேமமாலினிக்கு நாக தோஷம் இருப்பதாகவும், இந்த தோஷத்தை குணப்படுத்த வேண்டும் என்றால் பவுர்ணமி அன்று பூஜை செய்ய வேண்டும் அப்படி செய்தால் தான் தோஷம் நீங்கும் என கூறியுள்ளார். 

மேலும் படிக்க | உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் திருமணத்தில் 13 பெண்கள் பரிதாப சாவு

பூசாரியின் பேச்சை நம்பிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை முனுசாமி பூசாரியின் ஆசிரமத்திற்கு பூஜைக்காக அழைத்து சென்றனர்.  பூசாரி கூறியபடி குடும்பத்தார்களுடன் ஆசிரமத்தில் அன்றிரவு ஹேமமாலினி தங்கி இருக்கிறார்.  அதன் பின்னர் அவரை அடிக்கடி ஆசிரமத்தில் தங்கி பூஜையில் ஈடும்படி பூசாரி கூறியுள்ளார்.  கடந்த 13ம் தேதி இரவு பூஜைக்கு வருமாறு ஹேமமாலினியை பூசாரி அழைத்துள்ளார், அவரும் பூஜையில் கலந்துகொண்டு இரவு 12 மணி வரை பூசாரிக்கு வேண்டிய பணிகளை செய்து கொடுத்திருக்கிறார்.  

Hemamalini

அதன் பின்னர் விடியற்காலை 4 மணியளவில் ஹேமமாலினி போச்சி மருந்து அருந்தி வாந்தி எடுத்து மயக்கமடைந்து இருக்கிறார்.  இதனைக்கண்ட பூசாரியின் மனைவி ஹேமமாலினியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அவர்கள் வெங்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததை தொடர்ந்து ஹேமமாலினியின் பெற்றோர்கள் பென்னலூர்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   இதனை தொடர்ந்து அவரது பெற்றோர்கள் அலுவலகத்திற்கு வந்த கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் காலில் விழுந்து பூசாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி அழுதனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்ப பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் கூறுகையில், "மிகுந்த வேதனைக்குள்ளாக்கிய கடும் கண்டனத்துக்கு உரிய சம்பவம் இது.  குற்றம் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் அவர்களின் சமூக விரோத கட்டமைப்பின் மீது எந்த தயவு தாட்சனையின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | தனது 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News