ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி..!!

சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி! 

Last Updated : Jun 7, 2019, 10:26 AM IST
ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி..!! title=

சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி! 

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை அடுத்த ராமகிருஷ்ணா சிக்னலில் இருந்து, ஏ.வி.ஆர் ரவுண்டானா வரையில் ஈரடுக்கு மேலம்பாலம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 6.8 கிலோ மீட்டர் தூரம் 173 தூண்களுடன், நவீன தொழில்நுட்பத்துடனும் இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதனால் ஐந்து ரோடு சந்திப்பு பகுதியில் போக்குவரதது நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 320 கோடி ரூபாய் மதிப்பிட்டில் கட்டப்படும் இந்த இரண்டடுக்கு மேம்பாலத் திட்டத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் வாகனங்கள் கடப்பதாக கணக்கெடுக்கப்பட்ட ஐந்து ரோடு பகுதியில்தான் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஐந்து ரோட்டில், ஏ.வி.ஆர்., ரவுண்டானா, சென்னை சில்க்சில் துவங்கி, சாரதா காலேஜ் சாலை வரையிலான பகுதியில் ஒரு பாலமும், குரங்குசாவடியில் தொடங்கி ஓமலூர் சாலை, அண்ணா பூங்கா வரை என, இரு உயர் அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. அதில், ஐந்து ரோடு துவங்கி புதிய பஸ் ஸ்டாண்டு வரையிலான பகுதியில் இரண்டு அடுக்கு மேம்பாலமாக அமைய உள்ளது. ஆந்திராவை சேர்ந்த கே.என்.ஆர்., நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து, இரண்டடுக்கு, மேம்பால பணிகளை மேற்கொண்டுள்ளது.

இரு தளங்களுடன் கட்டப்படும் இந்த மேம்பாலத்தின் முதல் தள கட்டுமானப்பணிகள் தற்போது முடிந்துள்ளன. இதற்காக சேலம் 5 ரோட்டிலிருந்து நாலாப் புறமும் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை தாங்க வலிமை மிகுந்த 173 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்து ரோட்டிலிருந்து புதிய பஸ் ஸ்டாண்டு வரை 600 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலத்தின் ஓடுதளமானது நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் மிக நீளமான இரண்டு அடுக்கு மேம்பாலம் என்ற சிறப்புடனும், சுமார் 7 கிலோ மீட்டர் தூர அளவை கொண்டதாக உருவாகி வரும் பாலம், சேலத்தின் மிக முக்கியமாக அடையாளமாக நிலை நிர்கபோகிறது. இந்நிலையில், ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி. 

 

Trending News