Tamil Nadu Crime Latest News Updates: சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல பொழுதுபோக்கு விளையாட்டு தளம், விஜிபி கிங்டம். இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். விடுமுறை மற்றும் விழா நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வருகை தருவார்கள். தமிழகத்தின் வேறு சில பகுதிகளில் இருந்தும் கூட வருகை தருவார்கள்.
இந்நிலையில், கடந்த ஜன.18ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த 24 வயதான இளம்பெண் தனது நண்பர்களுடன் விஜிபிக்கு சென்றுள்ளார். அப்போது பல்வேறு விளையாட்டுகளை விளையாடி உள்ளனர். இந்நிலையில், அந்த இளம்பெண் இறுதியாக நீர் சறுக்கு விளையாடி உள்ளார்.
இருவரிடம் ஊழியர் பாலியல் சீண்டல்
நீர் சறுக்கு விளையாடும் நபர்களை தண்ணீரில் (நீச்சல் குளத்தில்) இருந்து மேலே அனுப்புவதற்கு, நீச்சல் குளத்தில் விஜிபி ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். இது வழக்கமான ஒன்றுதான். அப்படி இருக்கும்போது புகார் அளித்த அந்த 24 வயதான இளம்பெண், நீர் சறுக்கு விளையாடி தண்ணீரில் வரும்போது, கீழே பணியில் இருந்த விஜிபி ஊழியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், உடனே அங்கு இதுகுறித்து தான் கூச்சலிட்டதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக அந்த பெண்ணுடன் வந்திருந்த 19 வயது பெண் மற்றும் 16 வயது சிறுமியிடம் அந்த ஊழியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் விஜிபியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தவெக தலைவர் விஜய் சொன்னது உண்மைதான் - நடிகை கௌதமி அதிரடி!
புகாரை அடுத்து போலீசார் நடவடிக்கை
சென்னை ஈசிஆர் பனையூரை சேர்ந்த சுரேந்தர் (31) என்பவர்தான் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுகுறித்து விஜிபி அருகில் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் விசாரணை மேற்கொண்ட நீலாங்கரை போலீசார் அந்த வழக்கை திருவான்மியூரில் உள்ள நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். ஆய்வாளர் ராஜேஸ்வரி புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
பின்னர் நேற்று (ஜன. 20) காலை நீலாங்கரை போலீசார் மூலம் விஜிபி ஊழியர் சுரேந்தரை கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சுரேந்தரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, அந்த பெண் புகாரில் குறிப்பிட்டது உண்மை என தெரியவந்ததாக போலீசார் கூறினர். அதை தொடர்ந்து சுரேந்தர் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். சுரேந்தரை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | பரந்தூருக்கு பதில் பன்னூரில் ஏர்போர்ட்...? G-SQUARE தடையா? - செவி கொடுக்குமா திமுக?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ