Side Effects Of Not Applying Sunscreen : நம்மில் பலர், வெளியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் போடாமல் இருப்போம். இதனால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது தெரியுமா? அது குறித்து இங்கு பார்ப்போம்.
Side Effects Of Not Applying Sunscreen : மக்கள் இப்போது தங்களை தாங்களே நன்றாக பார்த்துக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். சரும பராமரிப்பு, முடி பராமரிப்பு குறித்த புரிதல்களும் இப்போது அதிகரித்துள்ளது. ஆனால், நம்மில் சிலர் இன்னமும் வெளியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் உபயோகிப்பதில்லை. மருத்துவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை இதனை உபயோகிக்க வேண்டும் என கூறுகையில், நாம் ஒரு முறை கூட இதனை உபயோகிக்கவில்லை என்றால் சருமத்திற்கு என்ன ஆகும்? இந்த பாதிப்புகள் குறித்து இங்கு பார்ப்போம்.
சன்ஸ்கிரீன் போடவில்லை என்றால், இளமையிலேயே வயதானவர்கள் போல உங்கள் சருமம் மாறலாம். சுருக்கம், கோடுகள் ஆகியவையும் வரலாம்.
சன்ஸ்கிரீன் போடவில்லை என்றால் சருமம் சிகப்பாவது, தோல் உரிவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
மூக்கு, வாய் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் சன்ஸ்கிரீன் போடவில்லை என்றால் நிறம் மாறலாம்.
சரும புற்றுநோயை ஏற்படுத்துபவையாக இருக்கிறது, UV கதிர்கள். சன்ஸ்கிரீன் போடாமல் இருப்பதால் இந்த கதிர்களால் நமது சருமம் எளிதில் பாதிப்படைய கூடும். எனவே, சன்ஸ்கிரீன் போடவில்லை என்றால் சரும புற்றுநோய் எளிதில் வரவும் வாய்ப்புள்ளது.
அதிக நேரம் UV கதிர்களால் பாதிக்கப்பட்டால், சருமம் எளிதில் வரட்சியாக மெல்லியதாக மாறி விடும்.
சன்ஸ்கிரீன் போடாமல் இருப்பது நேரடியாக கண்களை பாதிக்காது. இருந்தாலும், சன்ஸ்கிரீன் போடாததால் நமக்கு வெயிலில் இருந்து வரும் UV கதிர்களில் இருந்து பாதுகாப்பு இருக்காது. இது, நம் கண்களை சுற்றியிருக்கும் சருமத்தை பாதிக்கலாம். இதனால், கண்ணுக்கும் பாதிப்பு வரலாம்.
எப்போதும் சன்ஸ்கிரீன் போடாமல் வெயிலில் சென்று கொண்டிருந்தால் உடலின் சில பாகங்கள் ஒரு நிறத்திலும், சில பாகங்கள் இன்னொரு நிறத்திலும் இருக்கும்.