புதுக்கோட்டை கனிமவளக் கொள்ளை | புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை..!

Pudukkottai | புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளையை புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமவள கொள்ளை தொடர்பாக ஜெகபர் அலி கடைசியாக பேசிய வீடியோவும் இப்போது வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 20, 2025, 11:22 AM IST
  • புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்
  • கனிமவளக் கொள்ளை புகார் செய்தவர் கொலை
  • எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கடும் கண்டனம்
புதுக்கோட்டை கனிமவளக் கொள்ளை | புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை..! title=

Pudukkottai Murder | புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கனிமவளக் கொள்ளை குறித்து புகார் அளித்த ஜெகபர் அலி என்பவர் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக ஆர்வலராகவும், அஇஅதிமுக-வில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளராக இருந்து வந்தார். கனிமவள கொள்ளை குறித்து தொடர்ச்சியாக அதிகாரிகளிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்த நிலையில், கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கனிமவள கொள்ளை தொடர்பாக ஜெகபர் அலி கடைசியாக பேசிய வீடியோவும் இப்போது வைரலாகியுள்ளது.

ஜெகபர் அலி கடைசி வீடியோ

கனிமவள கொள்ளை குறித்து அவர் வெளியிட்ட கடைசி வீடியோவில், திருமயம் தாலுகா, துளையானூரில் ஏராளமான சட்டவிரோதமான குவாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆர்ஆர் குரூப் 70 ஆயிரம் லாரிகளில் சக்கைகளை திருடிச் சென்று பதுக்கி வைத்திருப்பதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், டிஆர்ஓ உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஜெகபர் அலி தெரிவித்துள்ளார்.

தாசில்தாரிடமும் இது குறித்து கடந்த 26 ஆம் தேதி மனு அளித்ததாகவும், அது எப்படியோ லீக் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். இதனால் ஆர்ஆர் குரூப் திருடிய சக்கைகளை மீண்டும் குவாரிக்குள் கொட்டிக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்வதாகவும் கூறியுள்ளார். இந்த சூழலில் தான் அவர் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

ஜெகபர் அலி படுகொலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட  அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான  திரு.ஜெபகர் அலி, சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது

கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த விடியா அரசு. கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்ணாமலை கடும் கண்டனம்

ஜெகபர் அலி கொலைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான திரு. ஜெகபர் அலி அவர்கள், கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், மோடி கபடி லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற, முக்கிய பங்காற்றியவர் திரு. ஜெகபர் அலி அவர்கள். இயற்கை வளப்பாதுகாப்பு, கனிமவளங்களின் கொள்ளையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அக்கறையுடன் செயல்பட்டவர்.  கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் பலி கொடுத்திருக்கிறார்கள். 

இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாடுபட்டவர் உயிரை எடுக்குமளவுக்கு, தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனக் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் மணல் கொள்ளைக்குச் செல்லலாம் என்று கூறியே ஆட்சிக்கு வந்த திமுக கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன? 

கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்." என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | புதிய தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளீர்களா? அரசின் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

மேலும் படிக்க | பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் உண்மையில்லை - சங்ககிரி ராஜ்குமார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News