மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு நடத்தும் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சஞ்சய் ராய்க்கு சாகும் வ் வரை சிறை சிறையில் அடைக்க கொல்கத்த சீல்டா நீதிமன்றம் இன்று (ஜன.20) உத்தரவிட்டுள்ளது. அதோடு குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடாக மேற்கு வங்க மாநில அரசு வழங்கிட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய சம்பவம்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி தான் இந்திய நாட்டையே உலுக்கிய இச்சம்பம் அரங்கேறியது. மேற்கு வங்க மாநிலம் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உடலில் சுமார் 25 இடங்களில் காயங்கள் இருந்தன. இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்ட களத்தில் குதித்தனர். இந்த சூழலில் இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்தது.
மேலும் படிங்க: TN Rain Alert: மக்களே குடையை ரெடியா வச்சுக்கோங்க.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!
இந்த நிலையில், இன்று (ஜன.20) நீதிபதி அனிர்பன் தாஸ் தனது தீர்ப்பை வாசித்தார். அதில், சிபிஐ சஞ்சய் ராய்க்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிறுபித்துள்ளது. பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து சஞ்சய் ராய், பின்னர் மருத்துவரின் குரல்வளையை நெரித்து, அவரின் முகத்தை இறுக்கியதால் அவர் உயிரிழந்துள்ளார். சஞ்சய் ராய் குற்றவாளி என தெரிவித்தார்.
அப்போது சஞ்சய் ராய், நான் இதை செய்யவில்லை. இதை செய்தவர்களை ஏன் கைது செய்யவில்லை என கேட்டார். இந்நிலையில், இன்று பிற்பகல் தண்டனை குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
தண்டனை குறித்து மம்தா பானர்ஜி
நீதிமன்றம் அளித்த தண்டனை குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி; நான் திருப்தி அடையவில்லை. நாங்கள் மரண தண்டனையை கோரினோம். ஆனால் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை விதித்துள்ளது என தெரித்தார்.
மேலும் படிங்க: "ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாட வேண்டும்" - சுரேஷ் ரெய்னா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ