சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து செல்லும் ஆம்னி பேருந்துகள், பேருந்து நிறுத்தம் 5 ஏக்கர் நிலபரப்பில் 29 கோடி செலவில் முடிச்சூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதனை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் முடிச்சூர் சீக்கனா ஏரி 2 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள், முடிச்சூர் ரங்கா குளம் 1.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்துதல், 2 கோடி மதிப்பீட்டில் பம்மல் ஈஸ்வரி நகரில் விளையாட்டுத்திடல் மற்றும் பூங்கா, ஆலந்தூரில் 10 கோடி செலவில் சமுதாயநல கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர், உடன் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.
மேலும் படிக்க | பாஜக தலைவர் அண்ணாமலை மிகவும் கைராசிக்காரர் - அமைச்சர் மா.சுப்ரமணியம்!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கபட உள்ளதால் ஆம்னி பேருந்து நிறுத்தம் அமைக்க வெளிவட்ட சாலை முடிச்சூரில் 5 ஏக்கர் நிலபரப்பில் 29 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது, அதனை ஆய்வு செய்தேன். மேம்பாலம் கீழ் பூங்கா அமைத்தல், பள்ளி சீரமைப்பு, பேருந்து நிலையம் சீரமைப்பு உள்ளிட்டவை உட்பட 28 இடங்களில் ஆய்வு செய்துள்ளோம். 2 கோடி செலவில் சீக்கனா ஏரி மேம்படித்துதல், முடிச்சூர் ரங்காகுளம் 1.5 கோடி செலவில் மேம்படுத்த பட உள்ளது. பம்மல் ஈஸ்வரி நகரில் 2 கோடி மதிப்பில் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல், ஆலந்தூர் தொகுதியில் 10 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம். அடுத்த 3 மாதத்திற்குள் இந்த பணிகள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளை துவக்க உள்ளோம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் துவங்கிய போது முந்தைய ஆட்சியில் முறையான திட்டமிடல் இல்லாமல், போக்குவரத்தை கணக்கில் கொள்ளாமல் துவங்கப்பட்டதாலும், அடிப்படை தேவைகள் கணக்கிடப்படாமல் உள்ளதாலும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போதுமான வேலைகளை செய்து வருகிறோம். அதனால் ஜூன் மாதம் இறுதி அல்லது ஜூலை மாதம் தொடக்கத்தில் திறக்கபடும் என அமைச்சர் தெரிவித்தார். வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும் ஆம்னி பேருந்து நிறுத்ததிற்கு சம்மந்தமில்லை, அதனால் ஜூலை மாத இறுதிக்குள் பேருந்து நிலையம் திறக்கப்படும்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், நாளை 23.05.2023 செவ்வாய் காலை 11:25 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்கிறார். சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில், ஒரு வார கால அரசு முறை பயணத்தை நிறைவு செய்துவிட்டு, வருகின்ற மே 30 அல்லது 31ஆம் தேதி, சென்னை திரும்புகிறார். பல்வேறு முதலீடுகளை திரட்ட இந்த பயணம் உதவும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மதுபான கடைகளில் 40% போலி மதுபானங்கள் தான் விற்பனை - கே.பி.ராமலிங்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ