லாக்டௌன் விதிகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்குப் பதிவு: அரசியல் விளையாட்டு ஆரம்பம்!!

அண்ணாமலை அவர்கள் ஆகஸ்ட் 25 ஆம் தேதி டெல்லியில் உள்ள கட்சி தேசிய தலைமையகத்தில் பா.ஜ.க-வில் சேர்ந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2020, 11:44 AM IST
  • புதிய பாஜக உறுப்பினரான குப்புசாமி அண்ணாமலை மீது போலீசார் வழக்குப் பதிவு.
  • வரவேற்பு விழாவால் ஏற்பட்ட கூட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
  • தேசியவாத உணர்வை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு பணியாற்றுவேன் – அண்ணாமலை
லாக்டௌன் விதிகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்குப் பதிவு: அரசியல் விளையாட்டு ஆரம்பம்!! title=

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், புதிய பாஜக உறுப்பினருமான குப்புசாமி அண்ணாமலை (Kuppusamy Annamalai) மற்றும் நான்கு கட்சித் தலைவர்கள் மீது லாக்டௌன் (Lockdown) கட்டுப்பாடுகளை மீறியதாகவும் சட்டவிரோத முறையில் கூட்டம் கூட்டியதாகவும் போலீசார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். வியாழனன்று கோயம்பத்தூரில் (Coimbatore) உள்ள கட்சி அலுவலகத்திற்கு அண்ணாமலை முதன் முறையாகச் சென்றார்.  சித்தபுதுராரியாவில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அவர் சென்றபோது, கட்சித் தொண்டர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் அவருக்கு ஒரு இசைக்குழுவினருடன் இணைந்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ALSO READ: முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலை குப்புசாமி பாஜக-வில் சேர்ந்தார்!!

பாஜக (BJP) மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, பொதுச் செயலாளர் ஜி கே செல்வகுமார், பொருளாளர் எஸ் ஆர் சேகர், மாவட்டத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் இந்த வரவேற்பு விழாவில் கலந்து கொண்டனர். லாக்டௌன் கட்டுப்பாடுகளை அவர்கள் மீறியதாகவும், அவர்களது வரவேற்பு விழாவால் ஏற்பட்ட கூட்டம் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்தும் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

எனவே அவர்கள் மீது IPC-யின் 143 (சட்டவிரோத முறையில் கூட்டம் கூடுதல்), 341 (தவறான கட்டுப்பாடு), 269 (எந்தவொரு நோய் தொற்று பரவ வாய்ப்புள்ள அலட்சியம்) மற்றும் 285 (அலட்சியமான நடத்தை) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். அண்ணாமலை அவர்கள் ஆகஸ்ட் 25 ஆம் தேதி டெல்லியில் உள்ள கட்சி தேசிய தலைமையகத்தில் பா.ஜ.க-வில் சேர்ந்தார். "தேசியவாத உணர்வை" தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு பணியாற்றப்போவதாக அவர் வலியுறுத்தினார்.

அவர் தன்னை ஒரு தேசியவாதி என்று வர்ணித்து, வம்ச அரசியல், வாரிசு அரசியல் மற்றும் முகத்துதியில் மயங்காத ஒரே கட்சி பாஜக என்றும் தெரிவித்தார். 

Trending News