சென்னை: தமிழக அரசு அறிவித்த அரியர்ஸ் தேர்ச்சி முடிவை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் (AICTE) ஏற்க மறுப்பு என தகவல் வெளியாகி உள்ளது. அரியர்ஸ் (Arrears Students) வைத்துள்ள மாணவர்களை தேர்ச்சியடைய செய்வது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்ததாகவும், அதுக்குறித்து தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதிப்பருவத்தை (Semester Exam) தவிர மற்ற பருவத்தில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அரியர்ஸ் மாணவர்கள் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தாலே "பாஸ்" ஆனதாக தமிழக அரசு (TN Govt) அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவ-மாணவிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் சார்பில் வெளியாக தகவல் பெரும் அதிர்ச்சி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது வரும் 15 ஆம் தேதி முதல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் வழக்கம் போல் 3 மணி நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு, ஆன்லைன் தேர்வு ஒரே நேரத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.