திருமங்கலம் – நேரு பூங்கா இடையேயான சுரங்க மெட்ரோ ரயில் சேவை நேற்று முதல் தொடங்கியது.
சென்னை மாநகரின் போக்குவரத்தை குறைக்கும் மெட்ரோ ரயில் சேவை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 45 கிமீ தூரம் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ பாதைகள் அமைக்கப்படுகின்றன.
இந்த சுரங்க ரயில் பாதை சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைத்தார். நேரு பூங்கா முதல் கோயம்பேடு வரை சுமார் 8 கிமீ தூரம் இந்த சுரங்க ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு 40 சதவீதம் டிக்கெட் கட்டண சலுகை அளிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண சலுகை ஒருவாரத்திற்கு அமலில் இருக்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.