தினேஷ் கார்த்திக் தனது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு ஆட்டத்தை ஐபிஎல் 2022-ல் விளையாடி வருகிறார். பல ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் ஆர்சிபி தினேஷ் கார்த்திக்கை 5.5 கோடிக்கு ஏன் எடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பினர். சிலர் கார்த்திக் ஒரு முழு நேர வர்ணனையாளர் மற்றும் ஒரு பகுதி நேர கிரிக்கெட் வீரர் என்றும் கலாய்த்து வந்தனர். ஆர்சிபி அணியில் ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு பெற அந்த இடத்திற்கு ஒரு வீரர் தேவைப்பட்டார். அணியில் பினிஷர் இடத்தை தற்போது தினேஷ் கார்த்திக் கைப்பற்றி உள்ளார்.
மேலும் படிக்க | ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய சாஹல்! ஹாட்ரிக் எடுத்து சாதனை
ஐபிஎல் 2022-ல் இதுவரை விளையாடி உள்ள 6 இன்னிங்ஸ்களில், 209 ஸ்ட்ரைக் ரேட் உடன் 197 ரன்கள் அடித்துள்ளார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு தினேஷ் கார்த்திக் டி20 போட்டியில் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ODI உலகக் கோப்பை அரையிறுதியின் தோல்விக்குப் பிறகு கார்த்திக் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த ஐபிஎல் சீசனில் தினேஷ் கார்த்திக் 6 இன்னிங்ஸ்கள், 5 முறை நாட் அவுட் பேஸ்ட்மேனாக இருந்துள்ளார்.
வெளிநாட்டு வீரர்களை தாண்டி தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் இரண்டாவது சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றுள்ளார். மேலும், இந்த சீசனில் இதுவரை 14 சிக்ஸர்களை அடித்துள்ளார், இரண்டு முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, தினேஷ் கார்த்திக் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 23 டி20 போட்டிகளில், 157 ஸ்ட்ரைக் ரேட்டில் 49 சராசரியாக வைத்து இருந்தார். போட்டியின் எந்த நிலையிலும் அதைச் செயல்படுத்தும் நம்பிக்கையையும் கொண்டவர்.
டெல்லிக்கு எதிராக அவரது ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பிறகு பேசிய தினேஷ் கார்த்திக், "ஒரு பெரிய இலக்கு மனதில் இருப்பதாக ஒப்புக்கொண்டார். நாட்டிற்கு ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். இது பயணத்தின் ஒரு பகுதி. இந்திய அணியில் அங்கம் வகிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன்" என்று கூறி இருந்தார்.
மேலும் படிக்க | ஷிவம் துபே செய்த காரியம்! கடுப்பாகி தொப்பியை வீசிய ஜடேஜா!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR