ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், கிரிக்கெட்டருமான பிரெண்டன் டெய்லர் மேட்ச் பிக்ஸிங் புகார் வைக்கிறார். இதுதொடர்பாக தன்மீது தடையும் விதிக்கப்படலாம் என்றும் கூறுகிறார்.
இந்திய தொழிலதிபர் மீது மேட்ச் ஃபிக்சிங் தொடர்பான புகாரை முன்வைக்கும் ஜிம்பாப்வே அணியின் பிரெண்டன் டெய்லர் அதிர வைக்கிறார்.
ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு விரிவான பதிவில் பிரெண்டன் டெய்லர் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார். சமூக ஊடகங்களில் (Social Media) பதிவிடப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டு மிகவும் நீண்டதாக இருக்கிறது.
To my family, friends and supporters. Here is my full statement. Thank you! pic.twitter.com/sVCckD4PMV
— Brendan Taylor (@BrendanTaylor86) January 24, 2022
2019 அக்டோபரில் ஸ்பான்சர்ஷிப் விவரங்கள் மற்றும் ஜிம்பாப்வேயில் டி 20 போட்டியின் சாத்தியக்கூறுகளைப் பற்றி விவாதிக்க ஒரு தொழிலதிபரால் இந்தியாவுக்குச் செல்ல தான் அழைக்கப்பட்ட விதத்தைப் பற்றி டெய்லர் விரிவாக எழுதியுள்ளார் டெய்லர்.
இந்தப்பதிவு மிகவும் நீண்டதாக இருக்கிறது. மேட்ச் பிக்ஸிங்காக அவர் அணுகப்பட்டார் என்பதும், இந்தியத் தொழிலதிபருக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பதும் இந்த மிகவும் நீளமான குற்றச்சாட்டின் சாரம்சம் ஆகும்,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிரெண்டன் டெய்லர், இந்திய தொழிலதிபர் ஒருவருக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் கூற்றுகளை முன்வைத்துள்ளார். தான் அந்த தொழிலதிபரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றும் சொல்கிறார்.
“நான் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சுமையை சுமந்து வருகிறேன், அது என்னை மிகவும் இருண்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றது மற்றும் எனது மன ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் சமீபத்தில் தான் எனது கதையை நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினேன், முதலில் அது வெட்கமாகவும் பயமாகவும் இருந்தது” என்று அவர் தெரிவிக்கிறார்.
ALSO READ | 2021ஆம் ஆண்டுக்கான ICC மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா
35 வயதான டெய்லர் கடந்த ஆண்டு சர்வதேச ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதற்கு முன்னதாக, கிரிக்கெட் வீரர் டெய்லர் கோகோயின் உட்கொள்ளும் வீடியோ இந்தியாவில் (Cricketer in India) பதிவானது குறிப்பிடத்தக்கது.
அவர் இந்தியாவில் தங்கியிருந்த கடைசி நாளில் மேற்கூறிய தொழிலதிபர் மற்றும் அவரது சகாக்களால் இரவு உணவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு விஷயங்கள் வியத்தகு முறையில் மாறியது.
இரவு விருந்தின் போது கோகோயின் எடுக்க தூண்டிவிடப்பட்டதாகவும், அதன் வீடியோ எடுக்கப்பட்டதாகவும் டெய்லர் குற்றம் சாட்டினார். தான், புக்கிகளால் அணுகப்பட்டதை ஒப்புக்கொண்ட பிரெண்டன் டெய்லர், ஐசிசி அவருக்கு பல ஆண்டு தடை விதிக்கும் என்றும் கூறுகிறார்.
ALSO READ | விராட் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்க வேண்டாமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR