கேப்டன் ஆக ஆசையா ஹர்திக்? சஞ்சய் மஞ்சுரேக்கர் சொன்ன அட்வைஸ்!

ஹர்திக் பாண்டிய இந்திய அணியின் கேப்டாக 16 போட்டிகளில் இருந்துள்ள நிலையில், அதில் 11 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Jan 28, 2025, 05:35 PM IST
  • தற்போது சூர்யகுமார் யாதவ் டி20 கேப்டனாக உள்ளார்
  • மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டிய ஆவாரா?
  • கருத்து தெரிவித்த சஞ்சய் மஞ்சுரேக்கர்
கேப்டன் ஆக ஆசையா ஹர்திக்? சஞ்சய் மஞ்சுரேக்கர் சொன்ன அட்வைஸ்! title=

ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு வந்த பின் அவருக்கு டி20 அணியின் கேப்டன் பதிவி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரும், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரும் ஹர்திக் பாண்டியாவை ஓரம் கட்டிவிட்டு டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்திருக்கின்றனர். துணை கேப்டனாகவாது செயல்படுவார் என்று பார்த்தால் அந்த பொறுப்பையும் பறித்து அக்சர் பட்டேலிடம் கொடுத்து விட்டனர். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. 

ரோகித் சர்மா இல்லாத சமயத்தில் ஹர்திக் பாண்டியா டி20 கேப்டனாக செயல்பட்டு வந்தார். டி20 உலக கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்டார். ஆனால் காயத்தால் ஓய்வுக்கு சென்ற ஹர்திக் பாண்டியா மீண்டு வந்த நிலையில், அவரது பதவியை பறித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதுவரை 16 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார் ஹர்திக் பாண்டியா. அதில் 11 போட்டிகளில் வென்றது இந்திய அணி. 

மேலும் படிங்க: ஐபிஎல் தொடங்கும் தேதி இதானா? ஐபிஎல் தலைவர் அருன் துமால் தகவல்!

இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர், இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் மாறியதில் இருந்து இந்திய கிரிக்கெட்டின் வடிவங்களும் மாறிக்கொண்டே வருகிறது. 

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான அனுமுறை இருக்கும். அந்த வகையில் ஹர்திக் பாண்டிய அவர் அடுத்த கேப்டனாக வர வேண்டும் என்றால் அதற்கு தான் தயாராக இருக்கிறேன் என்பதை காட்ட வேண்டும். முதல் தர போட்டிகளில் ஹர்திக் பாண்டியா தற்போது விளையாடுவது கிடையாது. அதை மட்டும் அவர் தொடர்ந்து செய்தால் அடுத்த கேப்டன் ஆவதற்கான அனைத்து தகுதியும் அவருக்கு இருக்கின்றது. 

ஐசிசி தொடர்கள் அனைத்திலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் எல்லாம் ஹர்திக் பாண்டியாதான் பந்து வீசினார் என்பதை பலரும் மறந்து விட்டனர். ஆட்டத்தின் நடுபகுதியில் (Middle overs) அதிகம் ரன்களுக்கான ஓட வேண்டும். 

டி20-ஐ பொறுத்தவரை அது வித்தியாசமான அழுத்தத்தை கொடுக்கும். ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை உடல் அளவில் அணிக்காக அதிகம் கொடுக்க வேண்டி இருக்கும். குறிப்பாக ஆல் ரவுண்டர் என்றால் பொறுப்புகள் அதிகம், 7 முதல் 10 ஓவர்கள் வரை வீசிவிட்டு பேட்டிங்கில் 5 அல்லது 6வது வீரராக இறங்கி விளையாட வேண்டும். இதன் காரணமாக உடல் தகுதி மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.

மேலும் படிங்க: "தோனி வாய்ப்பு கொடுக்கவில்லை.. சேவாக் எனக்காக தியாகம் செய்தார்" - மனோஜ் திவாரி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News