சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சிறந்த 7 காலை பழக்கங்கள்!

நமது உடலில் மிகவும் முக்கியமான உடல் உறுப்புகளில் சிறு நீரகமும் ஒன்று. இவை உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்றுதல், இரத்தத்தைச் சுத்தப்படுத்துதல் மற்றும் வளர்சிதை மாற்றத்தின் செயல்முறைகளைச் சீராக்குதல் உள்ளிட்ட அனைத்து வேலைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பெரும்பாலான மக்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் உடற்பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்தும் மாறிவிட்டன. அந்தவகையில் வளர்ந்துவரும் பொருளாதாரத்தினாலும் பலரும் நடைமுறை பழக்கங்களை மாற்றி அமைக்கின்றனர். மேலும் நீங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கச் சிறு நீரகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.

 

1 /8

சிறுநீரகத்தின் ஆரோக்கியம் ஒரு உறுப்பை மட்டும் சார்ந்தது அல்ல. அது உடலின் பல்வேறு இயக்க செயல்பாட்டிற்கு இன்றியமையாத ஒன்றானது. 

2 /8

மாசுபாடு: சுகாதாரம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தூய்மையான சுற்றுப்புறச் சூழல் இந்த காலத்தில் இருப்பது அரிது. இந்த நிலையில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கச் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும்.

3 /8

தண்ணீர்: உடலுக்கு போதுமான தண்ணீர் இருக்க வேண்டும். உடல் எந்த அளவுக்கு நீரேற்றத்துடன் உள்ளதோ அதே அளவுக்குச் சிறு நீரகமும் ஆரோக்கியமாகச் செயல்படும்.  

4 /8

மூச்சுப்பயிற்சி: காலையில் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி செய்வதைப் பழக்கமாக்குங்கள். மூச்சுப்பயிற்சி செய்வதால் உடலுக்குச் சீரான ஆஜ்ஸிஜனேற்றம் கிடைக்கும் மற்றும் அதன் அளவு அதிகரிக்கும். யோகாசனம் செய்வதால் சிறு நீரகங்களுக்கு நல்ல பலன் ஆரோக்கியம் கிடைக்கும்.

5 /8

நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்: காலையில் பழங்கள் சாப்பிடும் பழக்கத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். தர்பூசணி, வெள்ளரி, திராட்சை மற்றும் ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து உள்ள பழங்களைக் காலை உணவாகச் சாப்பிடுங்கள். பழங்களில் நிறைந்திருக்கும் இயற்கை ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.  

6 /8

கிரீன் டீ அல்லது மூலிகை தேநீர்: காலையில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதனைத் தவிர்த்து மூலிகை தேநீர் குடிப்பதைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை கல்லீரலைச் சுத்தப்படுத்துகிறது மற்றும் சிறந்த செயல்பாட்டை மேம்படுத்துகிறது. உதாரணமாகத் துளசி போன்ற மூலிகை டீ குடிப்பது நல்ல பலன் கிடைக்கும்.

7 /8

நீர்: காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றைக் கலந்து குடிக்கவும். இவை குடல் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கல்லீரல் சுத்தம் செய்கிறது. மேலும் உங்கள் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருங்கள்.

8 /8

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)