இந்திய அணியில் 5 ஸ்பின்னர்கள்... ரோஹித்தின் முடிவு நல்லதா? சொதப்பலா...?

ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் 15 பேர் கொண்ட ஸ்குவாடில் 5 சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது நல்லதா, கெட்டதா என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 13, 2025, 11:17 PM IST
  • சாம்பியன்ஸ் டிராபி பிப். 19இல் தொடங்குகிறது.
  • பிப்.20இல் இந்தியா, வங்கதேசத்துடன் மோதுகிறது.
  • அதன்பின் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்தை இந்தியா சந்திக்கும்.
இந்திய அணியில் 5 ஸ்பின்னர்கள்... ரோஹித்தின் முடிவு நல்லதா? சொதப்பலா...? title=

ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் முழுமையாக ஒரு வாரம் கூட இல்லை. 

சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் அணிகள் நாளையுடன் தங்களது பிற தொடர்களை முடித்துக்கொள்ள இருக்கின்றன. ஏற்கெனவே, இந்தியா, இங்கிலாந்து தொடர் நிறைவுபெற்றுவிட்டது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் எந்த தொடரிலும் தற்போது மோதவில்லை.

ICC Champions Trophy 2025: சோகத்தில் ரசிகர்கள்

 நாளை இலங்கை அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2வது ஒருநாள் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மோதுகிறது. அதன்பின்னர் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தான் புறப்படும்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் நாளை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து மோதுகின்றன. தென்னாப்பிரிக்காவும் அங்கேயே தொடருக்கு தயாராகி வருகிறது. பும்ரா, கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், நோர்க்கியா, கோட்ஸி என முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இருப்பதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் சற்று சோகத்தை வரவழைத்திருக்கிறது.

மேலும் படிக்க | ரிஷப் பந்துக்கு இந்திய அணியில் இடமில்லை - பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஓபன் டாக்

ICC Champions Trophy 2025: பும்ராவுக்கு பதில் வருண்

குறிப்பாக, இந்திய அணியில் பும்ரா இல்லாமல் விளையாடுவது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. முதலில் அறிவிக்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஸ்குவாடில் பும்ரா இடம்பெற்றிருந்தார். தற்போது பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ராணா அணிக்குள் வந்துள்ளார். பும்ரா இல்லாததால் பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் X Factor வீரரான வருண் சக்ரவர்த்தி அணிக்குள் வந்திருக்கிறரா். எனவே, ஜெய்ஸ்வாலுக்கு ஸ்குவாடில் இடமில்லை.

ICC Champions Trophy 2025: ஜடேஜா, அக்சர் உறுதி 

வருணின் வருகையால் இந்திய அணியின் 15 பேர் கொண்ட ஸ்குவாடில் 5 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். வருண் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பிரீமியம் ஸ்பின்னர்களாகவும், ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் ஆகியோர் ஆல்-ரவுண்டர்களாகவும் அணியில் உள்ளனர். இதில் ஜடேஜா, அக்சர் பிளேயிங் லெவனில் விளையாடுவது 99% உறுதி. வாஷிங்டன் அவர்களுக்கு பேக்அப்தான்.

ICC Champions Trophy 2025: இந்தியாவின் பிளான் A 

எனவே, இந்திய அணிக்கு இரண்டு சாய்ஸ் தான் இருக்கிறது. ஒன்று, வருண் - குல்தீப் இருவரில் ஒருவரை மட்டும் பிளேயிங் லெவனில் எடுத்துக்கொண்டு 2 பிரீமியம் வேகப்பந்துவீச்சாளர், 2 சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள், 1 வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் உடன் களமிறங்குவது. இதுவே இந்தியாவின் பிளான் A ஆக இருக்கும், இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | உப்புச்சப்பு இல்லாமல் முடிந்த ஓடிஐ தொடர்... இந்திய அணிக்கு இதனால் என்ன பயன்?

காரணம், இந்திய அணி விளையாடும் துபாய் மைதானத்தில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சு ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும், மிடில் ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களின் தேவை நிச்சயம் தேவைப்படும். ஒரு பிரிமீயம் வேகப்பந்துவீச்சாளரையும், பாண்டியாவை மட்டும் வைத்துக்கொண்டு ஸ்பின்னர்களை மிடில் ஓவர்களில் தாக்குதல் தொடுக்க வைக்க முடியாது. இரண்டு எண்டிலும் ஸ்பின்னர்கள் வந்தால் பேட்டர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் மாறிவிடும். எனவே, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷமி (அ) ஹர்ஷித் ராணாவை எடுத்து, ஓப்பனிங் - மிடில் - டெத் மூன்றிலும் பிரச்னை இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.

ICC Champions Trophy 2025: இந்தியாவின் அவசர பிளான்

ஒருவேளை, இது கைக்கொடுக்கவில்லை என்றாலோ, லீக் போட்டிகளில் ஏதும் தோல்வி வர நேர்ந்தாலோ காம்பினேஷனை மாற்ற நிச்சயம் முற்படுவார்கள். அப்போது வேண்டுமானால் இந்திய அணி 2 பிரீமியம் ஸ்பின்னர்களை, 2 சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களுடன் களமிறக்கலாம். இதுவும் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சூழலை பொறுத்தே முடிவெடுக்க வேண்டும்.

ICC Champions Trophy 2025: 5 ஸ்பின்னர்கள் - உதவுமா, உதவாதா...?  

அந்த வகையில், 5 ஸ்பின்னர்களுடன் சென்றது இந்தியாவின் ஒரு தற்காப்பு முயற்சிதான் எனலாம். வருணோ, குல்தீப்போ முழு தொடரையும் கூட தவறவிடலாம். ஆனால், எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த முடிவை ரோஹித் - கம்பீர் - அகர்கர் எடுத்திருக்கலாம். எனவே இது நல்ல திட்டமாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வை அறிவிக்கும் 5 முக்கிய வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News