சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி! பெண் குழந்தைகள் குறித்து கேலிப்பேச்சு..என்ன சொன்னார்?

Chiranjeevi Ram Charan Grandson Legacy Controversy : தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மேடையில் ஆண் குழந்தை பற்றி பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Yuvashree | Last Updated : Feb 12, 2025, 03:19 PM IST
  • சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!!
  • பெண் குழந்தைகள் பற்றி ஏளனப்பேச்சு..
  • என்ன சொன்னார் தெரியுமா?
சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி! பெண் குழந்தைகள் குறித்து கேலிப்பேச்சு..என்ன சொன்னார்? title=

Chiranjeevi Ram Charan Grandson Legacy Controversy : தென்னிந்திய சினிமா ரசிகர்களால் ‘மெகா ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், சிரஞ்சீவி. இவர், தனக்கு பிறந்து பேத்தி குறித்து ஏளனமாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிரஞ்சீவியின் சர்ச்சை பேச்சு:

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாராகவும் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர், சிரஞ்சீவி. நடிப்புத்துறையை தாண்டி அரசியலிலும் ஈடுபாடுள்ள இவர் சில ஆண்டுகள் அமைச்சர் பதவியிலும் இருந்திருக்கிறார். இவரது மகன் ராம் சரண், சகோதரர் பவன் கல்யாண் என இவரது குடும்பத்தை சேர்ந்த பலர் டோலிவுட்டில் பெரிய கைகளாக இருக்கின்றனர். இதனாலேயே இவர்களின் குடும்பம், ‘மெகா’ குடும்பம் என்றே ரசிகர்களால் அழைக்கப்படுகிறது.

சிரஞ்சீவி நேற்று (பிப்., 11) பிரம்ம ஆனந்தம் எனும் படத்தின் ரிலீஸிற்கு முந்தைய நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் இவர் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

பெண் குழந்தைகள் குறித்து..

சிரஞ்சீவி, பெண் குழந்தைகள் பற்றி பேசியதுதான் இவ்வளவு பெரிய புயலை கிளப்பியிருக்கிறது. “நான் வீட்டில் இருக்கும் போது, எனது பேத்திகள் என்னை சுற்றி இருந்தால், அது  வீடு போன்ற உணர்வையே தருவதில்லை. ஏதோ லேடீஸ் ஹாஸ்டலில், பெண்களுக்கு நடுவே இருக்கும் ஹாஸ்டல் வார்டன் போன்ற உணர்வை தருகிறது” என்று கூறியிருந்தார்.

அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, இன்னும் என்ன பேசினார் தெரியுமா? தான் தனது மகன் ராம் சரணிடம் அடுத்த முறை பெண் குழந்தை பெற்றுக்கொள்ள சொன்னதாகவும் கூறியிருக்கிறார். “நான் என் மகன் ராம் சரணிடம் ‘இந்த முறையாவது ஆண் குழந்தை பெற்றுக்கொள், அப்போதுதான் பரம்பரை தழைக்கும்’ என சொல்லிக்கொண்டேஇருப்பேன். ஆனால், அவன் அடுத்த முறையும் பெண் குழந்தை பெற்றுக்கொள்வானோ என பயமாக உள்ளது” என்று கூறியிருக்கிறார். சிரஞ்சீவிக்கு மூன்று பேத்திகள் இருக்கின்றனர். இதில், ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு 2023ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

வலுக்கும் கண்டனங்கள்:

இந்தியா, பல தரப்பட்ட பிற்போக்கு வாதிகள் நிறைந்த நாடாக இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதன் ஒரு பகுதியாக சினிமாவில் பெண்களை இழிவு படுத்த யாரும் தயங்குவதே இல்லை. குறிப்பாக, தெலுங்கு திரையுலகில் பெண்களை நடிக்க வைப்பதே அவர் காட்சி பொருளாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். படங்களே இந்த கதியில் இருக்கும் போது, அதில் நடிக்கும் ஸ்டார் நடிகர்களின் எண்ணங்கள் மட்டும் ரொம்ப முற்பாேக்காகவா இருக்கும்? அதைத்தான் தற்போது சிரஞ்சீவியின் இந்த கேலிப்பேச்சும் நிரூபித்திருக்கிறது.

இது குறித்து இணையத்தில் ஒரு ரசிகர் பேசுகையில், “இந்த 2025ஆம் ஆண்டிலும் ஆண் வாரிசுகள் மீதிருக்கும் பிரியம் தொடருகிறது. சிரஞ்சீவியின் பேச்சு ஏமாற்றத்தை அளித்தாலும், இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் சிலர், “பெண் பிள்ளையை பெற்றுக்கொள்வதும், ஆண் பிள்ளையை பெற்றுக்கொள்வதும் அந்த பெற்றோர்கள் கையிலேயே இல்லை. இது தெரியாமல் இவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்?” என்று கூறி வருகின்றனர்.

ஒரு சில ரசிகர்கள், மூளையே இல்லாமல் சிரஞ்சீவியின் இந்த கருத்துக்கு முட்டு கொடுத்து வருகின்றனர். அதில் ஒருவர், “ஒருவர் ஆண்பிள்ளை வேண்டும் என நினைப்பதில் தவறே இல்லை.  ஆண் பிள்ளை மட்டும்தான் வேண்டும் என சிலர் நினைப்பதால்தான் பிரச்சனைகளே வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி! அமரன் படத்தால் வந்த புதிய சிக்கல்!

மேலும் படிக்க | தெலுங்கு மக்கள் அவதூறு சர்ச்சை... நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News