ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறதா? இனி CSK அணிக்காக ஆட மாட்டார் சின்ன தல சுரேஷ் ரெய்னா

2020 ஐபிஎல் மட்டுமல்ல, இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா ஆட மாட்டார் என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 31, 2020, 04:15 PM IST
  • தோனிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்
  • துபாயில் இருக்கும் சிஎஸ்கே முகாமில் 13 பேருக்கு கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன
  • அறையில் ஒரு பால்கனியில் இல்லை என்பதுதான் பிரச்சனை.
  • சிஎஸ்கே ( CSK) அணியில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றவர்
  • சிஎஸ்கே ( CSK) அணியில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றவர்
ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறதா? இனி CSK அணிக்காக ஆட மாட்டார் சின்ன தல சுரேஷ் ரெய்னா title=

துபாய்: ஐபிஎல் 2020 தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா வெளியேறியது அவரது தனிப்பட்ட காரணங்கள் எனக் கூறப்பட்டாலும், தோனிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தான் காரணம் என செய்திகள் வெளியாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த ஆண்டு ஆல்-ரவுண்டர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina) விளையாடுவது கூட சந்தேகம் எனக்தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் 2021 பதிப்பிற்கு (IPL  Scheduled 2021) முன்னர் சி‌எஸ்‌கே அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் (N Srinivasan) அவரிடம் இருந்து விலகி செல்லக்கூடும். 

துபாயில் இருக்கும் சிஎஸ்கே முகாமில் 13 பேருக்கு கோவிட் -19 (COVID-19) தொற்று பதிவாகியுள்ளன. இதில் இரண்டு பேர் அணியின் முக்கிய உறுப்பினர்கள் - தீபக் சாஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் என ஐபிஎல் வட்டாரம் கூறியது. தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தில் 32 வயதான சுரேஷ் ரெய்னாவின் "நடத்தை" குறித்து குறிப்பாக குழு நிர்வாகம் மகிழ்ச்சியடையவில்லை என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது. இது சிஎஸ்கே உரிமையாளரும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான என் சீனிவாசனை கோபப்படுத்தி உள்ளது. 

ALSO READ |  IPL 2020: அவசர அவசரமாக இந்தியா திரும்பிய சுரேஷ் ரெய்னா... என்ன காரணம்?

"சி.எஸ்.கே. அணியில் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் மேலாளர் ஆகியோர் பால்கனி இருக்கும் ஹோட்டல் அறையை பெறுவார்கள் என்பது விதிமுறை. இருப்பினும், உரிமையாளர் தங்கியிருக்கும் ஹோட்டலில் ரெய்னாவுக்கு ஒரு  அறை ஒதுக்கப்படுகிறது. ஆனால் அவரது அறையில் ஒரு பால்கனியில் இல்லை என்பதுதான் பிரச்சனை என்று ஐபிஎல் வட்டாரம் பி.டி.ஐ. செய்தி ஊடகத்திடம் கூறியுள்ளது.

கேப்டன் தோனிக்கு கொடுக்கப்பட்ட அறை போல தனக்கும் கொடுக்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா கேட்டதாகவும், அதனால் தோனி (MS Dhoni) மற்றும் ரெய்னா இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

ALSO READ |  நாங்கள் உங்களை ரொம்ப மிஸ் செய்வோம் ரெய்னா: வாட்சன் உருக்கமான வீடியோ வெளியீடு!!

164 ஐபிஎல் ஆட்டங்களில் ஆடி 4527 ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே (CSK) அணியில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார். ஐபிஎல் வரலாற்றில் 5368 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலியின் (Virat Kohli) 5412 ரன்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Trending News