நவகிரகங்களில் ராகு கேது என்கிற இரண்டு கிரகங்களையும் கிரகங்களாக பாவித்து பலன் சொன்னாலும், இவை இரண்மே ஒரே வடிவத்தின் தலை மற்றும் வால் பகுதி தான். இந்த கிரகங்கள் பருப்பொருள் இல்லாத நிழல் வடிவாய் இருப்பதால் தான், ஜோதிட சாஸ்திரம் ராகு கேதுவை சாயா கிரகங்கள் என்று குறிப்பிடுகிறது.
நிழல் கிரகம் ராகு
சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே சுற்றி வரும் நிழல் உருவங்களான ராகு ,கேதுவை சூரியன் மற்றும் சந்திரனின் நிழல்கள் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
கரும்பாம்பு
ராகு கிரகத்தை, கரும்பாம்பு என்றும் அழைப்பார்கள். பாம்பின் ஒரு பகுதியாக சித்தரிக்கப்படும் ராகு கிரகம், சூரியன், சந்திரனை கூட கிரகணம் செய்து இயங்க விடாமல் தடுக்கக்கூடிய வலிமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஜோதிட சாஸ்திரங்களின்படி, ராகுவோடு இணைந்தால், அனைத்து கிரகங்களும் தங்களது காரகத்துவத்தை சற்று குறைத்துக் கொண்டு பலவீனப்படும்.
மேலும் படிக்க | ஓம் எனும் பிரணவ மந்திரம்! பிரபஞ்சத்தின் மூலாதார மந்திரத்தின் ஆன்மீகச் சிறப்பு!
மூதாதையர்களை குறிப்பிடும் ராகு
ராகு ஒருவரின் ஜாதகத்தில் அவருடைய முன்னோர்களை குறிக்கக்கூடிய கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, ராகுவுக்கு போக காரகன் என்ற பெயரும் உண்டு. இதற்கு காரணம் என்னவென்றால், இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற இச்சையை மனதில் ஏற்படுத்தும் கிரகம் ராகு என்பதால் தான் போகக் காரகன் என்று அறியப்படுகிறார்.
ராகுவும் தொழில்களும்
ஒருவரின் வெளிநாட்டு வாழ்க்கையை குறிக்கக்கூடிய கிரகம் ராகு. அதேபோல், பங்குச்சந்தையை குறிக்கக்கூடிய கிரகமான ராகு மறைமுக தொழில்களை குறிக்கக்கூடிய கிரகம் என்றும் கூறுவார்கள். அதேபோல, நவீன தொழில்நுட்ப யுக்திகள், சாதனங்கள் ஆகியவற்றை குறிக்கக் கூடிய கிரகம் ராகு.
பிரபலமாக்கும் ராகு
சாமானியரையும் மிகவும் மிகப்பெரிய பிரபலமாக மாற்றிவிடக் கூடிய கிரகம் ராகு. சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவரை சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து உள்ள மனிதராகவும், அனைவரும் பாராட்டும் மனிதராகவும் மாற்றும் கிரகம் ராகு தான்.
நன்மை செய்யும் ராகு
ராகு பகவான் மேஷம், ரிஷபம், கடகம் கன்னி மகரம் ஆகிய இடங்களில் இருக்கும் போது நன்மைகள் செய்வார். பொதுவாக ஜோதிடத்தில் 3 6 ,10 ,11 போன்ற இடங்களில் பாவ கிரகங்கள் அமரும் போது தனது தசையில் நன்மைகள் செய்யும். ராகு இருள் கிரகம் என்பதால், ஒளி கிரகம் ஒன்றின் தொடர்பை பெறும் பொழுது மட்டுமே நன்மைகளை கொடுப்பார்.
எனவே ராகு தசையில் நல்ல பலன்களை செய்ய வேண்டுமானால், மற்றொரு சுப கிரகத்தின் தொடர்பு வேண்டும் ராகு அமர்ந்த வீட்டின் அதிபதி வலிமையாக இல்லை என்றால், சுப கிரக தொடர்பு இருந்தால் கூட ராகு திசை மிகப்பெரிய நன்மைகளை செய்யாது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுக்கிரன் எந்த லக்கினத்தில் இருந்தால் நன்மை? எந்த லக்கினத்தில் இருந்தால் ஆபத்து?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ