ஐப்பசி வளர்பிறை ஏகாதசி: ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை அகலும், பசிப்பிணி நீங்கும், பாவ விமோச்சனம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. நவம்பர் 4 ம் தேதி ஐப்பசி ஏகாதசி அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று, அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் சுவாமி பத்மநாபரை, பூஜை செய்து வணங்கினால், வாழ்க்கையில் வேண்டுவன எல்லாம் பெற்று சுக,போகமாக வாழ்க்கை வாழலாம். மேலும், மரணத்திற்குப் பின், மோட்சப்பிராப்தியையும் அருளுவார் விஷ்ணு பகவான். ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் புண்ணிய பலனானது, நூறு அஸ்வமேத யாகம் மற்றும் நூறு ராஜசூய யாகம் செய்வதால் கிட்டும் புண்ணிய பலனில் பதினாறில் ஒரு பங்கிற்கு சமமானதாகும்என நமது வேத சாஸ்திரங்களும் புராணங்களும் கூறுகின்றன.
இந்து மதத்தில், பல விதமான விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன என்றாலும், ஏகாதசி விரதத்துக்கு தனி சிறப்பு உண்டு. ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால், மனித மனம் தூய்மை அடைகிறது, மனதில் உள்ள கோபம், வெறுப்பு, குழப்பம் ஆகியவை விலகி எண்ணங்கள் தூய்மை அடைகின்றன. நாம் செய்த பாவங்கள் விலகி, வாழ்க்கையில் ஏற்றத்தை காணலாம். மனதை ஒருநிலைப்படுத்தி நாள் முழுவதும் விரதமிருப்பது மிகவும் விசேஷமானது. ஏகாதசி விரதம் இருக்கும் நாளில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும்.
மேலும் படிக்க | நவம்பர் ராசிபலன்: யாருக்கு ‘சூப்பர்’... யாருக்கு ‘சுமார்’; பலன்கள் கூறுவது என்ன!
ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகளுடன் கூடவே, மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். அன்று முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. எனினும், உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள், சுவாமிக்கு நிவேதனம் செய்த பழங்களை சாப்பிடலாம். அவ்வப்போது தாகம் தீர்க்க தண்ணீரும் குடிக்கலாம்.
விரதத்தின் போது பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து கடவுள் சிந்தனையுடன் இருக்க வேண்டும். மகா விஷ்ணு குறித்த ஸ்தோத்திரங்களை கூறுவதும், பாடல்கள் இசைப்பதும் மனதிற்கு பெரும் நிம்மதியைத் தரும்.
மேலும் படிக்க | துலாமில் இணையும் புதன்-சுக்கிரன்; லக்ஷ்மி நாராயண யோகம் பெறும் '3' ராசிகள்!
ஏகாதசி விரத்தின் மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, ஏழைகளுக்கு அன்னதானம் அளித்த பிறகு, அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவு அருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்துவது மிகவும் சிறப்பு. கேளிக்கை அல்லது விருந்து போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏகாதசி விரத தினத்தன்று விரதம் இருப்பவர் மட்டுமல்லாது, வீட்டிலிருப்பவர்களும் மது அருந்துதல், புலால் உணவுகள் சாப்பிடுதல் போன்றவற்றை தவிர்ப்பது சிறப்பான பலன்களை தரும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ