வீட்டிற்குள் வரும் இந்த பூச்சிகள் எதிர்கால நிகழ்வுகளின் குறிப்புகளைத் தருமாம்

Astrology Prediction: வீட்டில் தோன்றும் பூச்சிகள் எதிர்கால நிகழ்வுகளின் குறிப்பைக் கொடுக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் நம்பப்படுகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 7, 2022, 11:51 AM IST
  • வீட்டில் தோன்றும் பூச்சிகள்
  • இந்த புழுக்கள் எதிர்கால நிகழ்வுகளின் குறிப்புகளை கொடுக்கின்றன
  • அசுபமான மற்றும் மங்களகரமான அறிகுறிகளை வழங்குகிறது
வீட்டிற்குள் வரும் இந்த பூச்சிகள் எதிர்கால நிகழ்வுகளின் குறிப்புகளைத் தருமாம் title=

ஜோதிட கணிப்பு: வீட்டில் பூச்சிகள் நடமாடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவை நம் வீட்டில் பல நோய்களைக் கொண்டு வரும். ஆனால் வாஸ்து படி, மங்களகரமானதாகக் கருதப்படும் அத்தகைய புழு மற்றும் பூச்சிகள் பொதுவாக வீட்டில் காணப்படும். ஆனால் அது நீங்கள் பார்க்கும் நிலையைப் பொறுத்தது. வாஸ்து சாஸ்திரத்தில் பூச்சிகளின் தரிசனம் சில சமயம் அசுபமான மற்றும் மங்களகரமான அறிகுறிகளைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது நாம் பார்க்க உள்ள இந்த பூச்சிகள் வீட்டின் மூலையிலோ அல்லது ஈரமான இடத்திலோ அதிகமாகக் காணப்படும்.

இன்று நாம் பேசப்போகும் புழுவை நீங்கள் உங்களின் வீட்டில் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இந்தப் பூச்சி வேறொன்றுமில்லை, இது ஆங்கிலத்தில் சென்டிபீட் என்றும் அழைக்கப்படுகிறது, மற்றும் தமிழில் இதை நாம் பூரான் என்று கூறுகிறோம். வீட்டில் பூரானின் தோற்றம் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் இரண்டின் அறிகுறியாகும், ஆனால் நீங்கள் பூரானை எப்படி பார்த்தீர்கள் என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும் படிக்க| அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 

இப்போதெல்லாம் யார் சொந்தமாக வீடு கட்டுகிறாரோ அவரே அதில் வழிபடும் இடத்தைத் தீர்மானிக்கிறார். அதன்படி பூஜை அறையில் இந்த  பூரானை நீங்கள் கண்டால், அது குடும்பத்திற்கும் உங்களுக்கும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பூஜையறையில் பூரானை பார்ப்பது உங்களுக்கு விரைவில் அன்னை லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்று அர்த்தமாகும். வீட்டில் பூரான் தோன்றுவதும், அதுவும் ஒரு நொடியில் மறைவதும் பலமுறை நடக்கும். நீண்ட நாட்களாக தாமதமாகி வரும் எந்த ஒரு வேலையும் விரைவில் முடிவடையும் என்று அர்த்தமாகும்.

பூரான் ராகு கிரகத்துடன் தொடர்புடையது. பூரானை ஒருபோதும் அடித்துக்கூடாது, ஏனெனில் அது துரதிர்ஷ்டத்திற்கு வழிவகுக்கும். வீட்டை விட்டு வெளியே பூரான் செல்லும் போது, அது வீட்டின் பிரச்சனைகளையும் எடுத்துச் செல்வதாக நம்பப்படுகிறது. வீட்டின் தரையிலோ அல்லது சமையலறையிலோ காணப்படும் பூரான், வீட்டில் உள்ளவர்களுக்கு கடுமையான பிரச்சனையை ஏற்படுத்துவதோடு, நோய்களையும் உண்டாக்கும் என்பார்கள். கழிப்பறை அல்லது பிரதான நுழைவாயிலில் பூரான் தோன்றினால், அது வீட்டில் கடுமையான நிதி இழப்பு ஏற்படுத்தும் என்று அர்த்தமாகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | விருச்சிக ராசியில் நுழையும் சுக்கிரன், இந்த 6 ராசிகளுக்கு பண வரவு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News