இவ்ளோ பெரிய வாழைப்பழமா..! வாய் பிளக்கும் நெட்டிசன்கள்..வைரல் வீடியோ..

Viral Video Of A Man Eating Banana : ஒருவர், தன் கையில் பெரிய வாழைப்பழத்தை வைத்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Oct 9, 2024, 06:51 PM IST
  • எவ்ளோ பெரிய வாழைப்பழம்..
  • அப்படியே சாப்பிடும் இளைஞர்..
  • வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!!
இவ்ளோ பெரிய வாழைப்பழமா..! வாய் பிளக்கும் நெட்டிசன்கள்..வைரல் வீடியோ.. title=

Viral Video Of A Man Eating Banana : தற்போதுள்ள டிஜிட்டல் உலகில், கையில் செல்போன் இல்லாமல் யாருமே இருப்பதில்லை. அதிலும், கடந்த 12 ஆண்டுகளில் இணையதளம் கண்ட வளர்ச்சிகள் மட்டும் ஏராளம். நொடிக்கு நொடி, நமது மனநிலையை மாற்றும் அளவிற்கு இணையத்தில் ஏதேனும் ஒரு பதிவோ, வீடியோவோ வந்து கொண்டே இருக்கிறது என்ற உண்மையை மறுக்க முடியாது. 

கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த கைப்பேசிக்குள், உலகின் எங்கோ ஒரு மூலையில் இருப்பவருடன் நம்மால் கனெக்ட் செய்யக்கூடிய மேஜிக்கும் நடக்கிறது. இந்த டெக்னாலஜி வளர்ச்சியால், சமூக வலைதளங்கள் அனைத்தும் மெருகேறியதோடு, இதில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருபவர்களும் தற்போது லட்சக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர்.  என்னதான் செல்போன் சாதனத்தால் நாம் தொல்லை என்று கருதினாலும், இதில் வரும் பதிவுகளை நின்று, பார்த்து, சிரித்து ரசிக்கத்தான்செய்கிறோம். இது, தொய்வாக இருக்கும் நம் மனதுக்கு ஆதரவு கொடுப்பதுடன், நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும், சமயங்களில் ஆச்சரியப்படவும் வைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ பதிவை இங்கு பார்ப்போம். 

பெரிய வாழைப்பழம்..

தற்போது, இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெரிய வாழைப்பழத்தை தன் கைகளில் பிடித்துக்கொண்டிருக்கிறார் ஒரு இளைஞர். அந்த இளைஞர் ஒல்லியான தேகம் கொண்டவராக இருப்பதால், ஏற்கனவே பெரிதாக இருக்கும் அந்த வாழைப்பழம் இன்னும் பெரிதாக தெரிகிறது. 

தொடரும் அந்த வீடியோவில், கையில் வைத்திருக்கும் வாழைப்பழத்தை அந்த இளைஞர் சாப்பிட ஆரம்பிக்கிறார். பாதியிலேயே அந்த பதிவும் முடிவடைகிறது. அந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு முடிக்கவே பல மணி நேரம் ஆகும் போல என அந்த விடியோவை பார்த்த இளைஞர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 

வாழைப்பழத்தின் சாதாரண அளவு:

பொதுவாக, ஒரு வாழைப்பழம் 1 முதல் 15 மீட்டர்கள் வரை இருக்குமாம். அது, அந்த பழத்தின் வகைகளை பொறுத்து அமையும் என கூறப்படுகிறது. மேலும், ஒரு வாழைப்பழம் 120 முதல் 150 கிராம் வரை இருக்குமாம். ஜெயிண்ட் ஹைலேண்ட் வாழைப்பழம், என்ற பழ வகை சுமார் 15 மீட்டர் வரை வளருமாம். 

மேலும் படிக்க | Snake Viral Video: காரின் கதவில் மறைந்திருந்த பாம்பு! அதிர்ச்சி வீடியோ!

மேலும் படிக்க | இணையவாசிகளை குழப்பிய நாகப்பாம்புகளின் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News