தவளைக்கு ஆசைப்பட்ட பாம்புக்கு பல்பு கொடுத்த சிறுத்தை: வைரல் வீடியோ

Snake Video: இந்த வீடியோவில் பாம்பு எப்படி ஒரு சிறுத்தையிடம் மாட்டிக்கொள்கின்றது என்பதை பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 1, 2022, 12:31 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல்.
  • தற்போதும் ஒரு பகீர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
  • வீடியோவை பல மில்லியன் கணக்கானோர் கண்டுள்ளனர்.
தவளைக்கு ஆசைப்பட்ட பாம்புக்கு பல்பு கொடுத்த சிறுத்தை: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு பகீர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் இந்த வீடியோ பாம்பு, தவளை மற்றும் சிறுத்தை தொடர்பானது. முதலில் பாம்பு தவளையை வேட்டையாட பிடிக்கிறது, ஆனால் அதே நேரத்தில் ஒரு சிறுத்தை அங்கு வந்து மொத்த விளையாட்டையும் மாற்றுகிறது.

 

 

வைரலாகி வரும் இந்த வீடியோவில் பாம்பு ஒன்று காட்டில் உள்ள தவளையை பார்ப்பதுக் கொண்டே இருக்கிறது. பின்னர் வேகமாக இந்த தவளையை அந்த பாம்பு லாபக்கென்று பிடிக்கிறது. இப்போது சிறுத்தை அங்கு வரும்போது இந்த இரண்டையும் அசாலதாக அடித்து பிடித்துவிடுகிறது. அப்போது பாம்பு மற்றும் சிறுத்தை இடையே நடக்கும் இந்தச் சண்டையில் வாய்ப்பைப் பார்த்து தவளை தப்பி ஓடிவிடுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதில் இருந்து மிகவும் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி @ViralINS கணக்கிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலவித ரியாக்ஷன்களை கொடுத்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | மணிக்கணக்கில் ஓடிவந்த சிறுத்தைக்கு காத்திருந்து அல்வா கொடுத்த மான் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News