தந்திரக்கார நரியையே தந்திரமாக காப்பாற்றிய நபர்! வைரலாகும் வீடியோ!

ஒரு பெரிய குழிக்குள் தவறி விழுந்து வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கும் நரியை ஒருவர் மனிதாபிமானத்துடன் காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 16, 2022, 09:13 AM IST
  • குழிக்குள் மாட்டிக்கொண்ட நரி.
  • வெளியேற முடியாமல் தவித்து வந்தது.
  • பின்பு கயிற்றின் மூலம் வெளியே வந்தது.
தந்திரக்கார நரியையே தந்திரமாக காப்பாற்றிய நபர்! வைரலாகும் வீடியோ!  title=

பொதுவாக நரியை தந்திரம் வாய்ந்தது என்று கூறுவோம், அதற்கு காரணம் அதன் தந்திரமான வேட்டையாடும் திறமை.  நாம் சிறு வயதிலிருந்தே நரியின் புத்திசாலித்தனம் குறித்து பல கதைகளை கேட்டறிந்து இருக்கிறோம்,  பெரும்பாலும் காடுகளில் அதிகளவில் ஊளையிட்டு கொண்டு சுற்றித்திரிந்த நரி இனங்கள் தற்போது தமிழகத்தில் அழிந்து வரும் நிலையிலுள்ளதாக கூறப்படுகிறது.  நரிகளை கண்டாலே பயந்து நடுங்கும் மக்களுக்கு மத்தியில்,  ஆபத்தில் சிக்கிக்கொண்ட நரியை தனி நபராக இருந்து மனிதநேயத்துடன் காப்பாற்றிய நபருக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் பக்கத்தில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், ஒரு பெரிய குழிக்குள் நரி ஒன்று தவறிவிழுந்துவிட்டு அந்த குழியை விட்டு வெளியேற முடியாமல் குழிக்குளேயே தவித்துக்கொண்டு இருக்கின்றது.  அந்த நரி தாவி குதித்துக்கொண்டு மேலே ஏற முயற்சி செய்துகொண்டு இருக்கிறது, ஆனால் அதனால் அந்த குழியினை விட்டு வெளியேவரமுடியாமல் மீண்டு மீண்டும் கீழே விழுந்துகொண்டு இருக்கின்றது.  இதனை பார்த்த ஒரு நபர் கயிறை குழிக்குள் போட்டு நரியை காப்பற்ற முயற்சி செய்கிறார், அந்த நரியால் அவர் போட்ட கயிறை பிடிக்க முடியாமல் அங்கும் இங்குமாக சுத்திகொண்டு இருக்கிறது.  பின்னர் ஒரு வழியாக அந்த நரி இறுக்கமாக கயிறை பற்றிக்கொள்ள அவர் மேலே தூக்கிவிடுகிறார்.  மேலே வந்ததும் நரி வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடுவதுடன் இந்த வீடியோ நிறைவடைகிறது.

 

மேலும் படிக்க | Viral video: ராஜ நாகத்தை ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; இறுதியில் வெற்றி யாருக்கு?

இந்த வீடியோவை பார்த்த பிறகு சமூகத்தில் இன்றளவும் சிலரிடம் மனிதநேயம் இருக்கிறது என்பது புலப்படுகிறது.  இணையத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள்  ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கும் ஒன்பதாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News