Easy Tips To Learn Any Skills Quickly : நாம் இதுவரை கற்றுக் கொண்டது கையளவு தான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது உலகளவு உள்ளது என்பதை ஒரு பழமொழி நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும். அந்த பழமொழியை பின்பற்றி வாழ நினைப்பவர்கள், தினம்தோறும் எதையாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று யோசிப்பர். அப்படி நினைக்கும் விஷயங்களை எளிதில் கற்றுக் கொள்ள நாம் ஏழு வழிகளை பின்பற்ற வேண்டும். அவை என்ன தெரியுமா?
சரியான இலக்குகள்:
நாம் இந்த விஷயத்தை கற்றுக்கொள்ள நினைக்கிறோமோ அதற்கான இலக்கை தெளிவாக தீர்மானிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு வருடத்தில் ஒரு மொழியை கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், அந்த வருடத்திற்குள் அந்த மொழியை முழுமையாக கற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் முன்னர் எதுவுமே தெரியாமல் இருந்ததற்கு இப்போது ஏதாவது ஒன்றாக உங்களுக்கு தெரிந்திருக்கும். எனவே முதலில் உங்களால் முடியும் இலக்குகளை நிர்ணயத்து விட்டு, பின்னர் நீங்கள் கற்றுக்கொள்ளும் திறன்களில் இருக்கும் பெரிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்.
அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொள்ளுதல்:
இதைக் கற்றுக்கொள்ள நினைத்தாலும் அதனை முதல் படியிலிருந்து ஆரம்பிப்பது நல்லது. அடித்தளம் சரியாக அமைந்திருந்தால் மட்டுமே, நீங்கள் அதற்கு மேற்பட்ட நிலைகள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் மனதில் நிற்கும். அதேபோல ஒரு விஷயத்தை ஆரம்பித்திலிருந்து தெரிந்து கொண்ட மட்டுமே அதில் நம்பிக்கையும் உங்களுக்கு பிறக்கும்.
80/20 விதி:
80/20 விதி என்னவென்றால், நமக்கு வரும் 80% ரிசல்ட், நாம் எடுக்கும் 20% முயற்சியில் இருந்து வருகிறது என்பதுதான். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அதில் இருக்கும் அடிக்கடி உபயோகிக்கும் வாக்கியங்களை அல்லது வார்த்தைகளை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையற்றதாக தோன்றும் விஷயங்களை மனதில் போட்டுக்கொண்டு அதனால் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். முடிந்தவரை அந்த வார்த்தைகளை அல்லது வாக்கியங்களை நன்றாக கற்று தினசரி உபயோகிக்க வேண்டும்.
தினம் தோறும் கற்றல்:
நாம் இதுவரை பார்த்த பெரிய அறிஞர்கள், எழுத்தாளர்கள், பிரபலமாக இருப்பவர்கள் தினம் தோறும் தங்கள் துறை சார்ந்த ஏதேனும் ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டே இருப்பவராக இருப்பர். உதாரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் 69 வயது ஆன போதிலும் அமெரிக்காவிற்கு சென்று ஏஐ தொழில்நுட்பம் குறித்து பயின்று வருகிறார். இப்படி நம் வாழ்வில் தினம் தோறும் ஏதேனும் ஒரு கற்றல் முறை இருந்தாலே நாம் கற்றுக்கொள்ள நினைக்கும் திறனை முழுமையாக பிடித்துக் கொள்ளலாம்.
ஆசிரியராக மாறுங்கள்:
ஒரு விஷயத்தை நாம் ஆழமாக பெற்றுக்கொண்டு அதை இன்னொருவருக்கு சொல்லிக் கொடுக்கும் போது நம் மனதிலும் பெரிதாக பகிர்ந்து விடும். நமக்குன்னாலும் படித்து அதை வைத்துக் கொள்வதற்கு பதிலாக இன்னொருவருக்கும் உதவி நமக்கு நாமே கூட உதவி செய்து கொள்ளலாம். பல சமயங்களில் உங்களிடம் நீங்களே கூட கேள்வி கேட்டு பதில் கூறிக் கொள்ளலாம்.
பயிற்சி:
கற்றுக்கொண்ட விஷயங்களை தினம் தோறும் பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அப்போது, அந்த திறனில் உங்களுக்கு அறிவு பெருகுவதுடன், நினைவுத்திறன் அதிகரித்து ஒரு ஒரு பழக்கமாகவே மாறி விடும்.
விமர்சனங்கள்:
நீங்கள் எந்த திறனை கற்றுக்கொண்டிருக்கிறீர்களோ, அதில் கைதேர்ந்தவரிடம் உங்களின் வேலைகளை காண்பித்து, அவரிடம் இருந்து விமர்சனத்தை பெறலாம். அதனை, உங்கள் கற்றலில் புகுத்தி, என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ளலாம் என்பதையும் பார்க்கலாம்.
மேலும் படிக்க | அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா? இதோ ஈசியான வழிகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ