7 Things You Must Do After Your Phone Fell On Water : நாம் பல சமயங்களில் கை தவறி, மொபைல் போன்களை தண்ணீருக்குள் போட்டிருப்போம். ஆனால், அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க மாட்டோம்.
7 Things You Must Do After Your Phone Fell On Water : நம்மில் பலருக்கு, கை தவறி எதையாவது கீழே கொட்டும் பழக்கம் இருக்கும். அப்படி, போனையும் எப்போதாவது தவறுதலாக தண்ணீரில் போட்டிருப்போம். அப்படி தண்ணீரில் போட்ட போனை மீண்டும் எடுத்தவுடன் கண்டிப்பாக நாம் சில விஷயங்களை செய்ய வேண்டும். அப்போதுதான், அதில் உள்ள டேட்டாவை காப்பாற்றி, போனையும் ஓரளவிற்கு பத்திரப்படுத்த முடியும். அப்படி நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
போன், தண்ணீரில் விழுந்தவுடன் எடுத்து விட வேண்டும். மிக நீண்ட நேரம் போன் தண்ணீரில் மூழ்கியிருந்தால் அது கண்டிப்பாக பாழாகி விடும்.
தண்ணீரில் இருந்து போனை எடுத்தவுடன், உடனடியாக போனை ஆஃப் செய்து விடுங்கள். வேறு எந்த பட்டனையும் அழுத்த வேண்டாம்.
போனில் இருந்து பேட்டரி, சிம்கார்ட், SD கார்ட் ஆகியவற்றை உடனடியாக கழற்றவும். அப்போது, அந்த பொருட்கள் பாழாகாமல் இருக்கும்.
ஒரு லைனின் துணியை எடுத்து, போனின் உட்புறத்தில் முழுவதுமாக துடைக்க வேண்டும். ஸ்பீக்கர், பவர் பட்டன் என அனைத்து இடங்களையும் துடைக்க வேண்டும்.
ஹேர் ட்ரையர் உதவியுடன் போனை நன்றாக காய வைக்க வேண்டும். அல்லது நன்கு வெயில் அடிக்கும் போது அதிலும் காய வைக்கலாம்.
Silica Gel பேக்கெட்டுகளில், போனை போட்டு வைக்கலாம். அப்படி இல்லை என்றால், அரிசியில் வைக்கலாம்.
போன் நன்றாக உலர்ந்த பிறகு, ஆன் செய்து சரியாக இயங்குகிறதா என பார்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால், இதில் கை தேர்ந்தவரிடத்தில் போனை கொடுத்து சரி பார்க்கலாம்.
எதற்கும் முன்னெச்சரிக்கையக உங்கள் போனில் இருக்கும் டேட்டாக்களை வேறு போனில் அல்லது லேப்டாப்பில் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.