Identify Your Secret Enemies : நம்முடன் பழகும் அனைவரும் நமக்கு தீங்கு நினைப்பவர்கள் அல்ல, அதே சமயத்தில் நம்முடன் பழகும் அனைவரும் நமக்கு நல்லது செய்பவர்களும் அல்ல. யார் என்ன செய்தாலும் அவர்களை ஒரு எல்லைக்கோட்டிற்குள் வைப்பதுதான் நமக்கு நல்லது. நம்முடன் நெருங்கி பழகும் ஒரு சிலரே நமக்கு ரகசிய எதிரிகளாக இருப்பர். அவர்களை கண்டுபிடிக்க சில டிப்ஸ்.
வஞ்சப்புகழ்ச்சி:
நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்திருந்தாலும் அல்லது ஒரு நல்ல ஆடையை உடுத்தியிருந்தாலும், அவர்கள் உங்களைப் பாராட்டுவது வஞ்சப்புகழ்ச்சி போல இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் நன்றாக பாடுகிறீர்கள் என்றால், அவர்கள் உங்களை பாராட்டும் போது, “உங்களைப் பார்த்தால் இவ்வளவு நன்றாக பாடுபவர் கூட தெரியவில்லை” என்பது போன்று பாராட்டுவர். இது உங்களுக்கு பாராட்டு தெரிவிப்பது போல இருந்தாலும் அதில் ஒருவித வன்மமும் தெரியும்.
உங்கள் முயற்சிகளை வீணாக்குவது:
நீங்கள் உண்மையாவே உங்கள் மனதிற்கு பிடித்து ஒரு விஷயத்தை செய்யும் போது அதை மட்டப்படுத்தி பேசுபவர்களாக இருப்பார். ஏதேனும் கருத்துக்காக அவரிடம் நீங்கள் கேட்டால், வேண்டுமென்றே உங்கள் முயற்சியை தொய்வடைய செய்ய வேண்டும் என்று தவறான அட்வைஸ்களை கொடுப்பர். “உன்னால இதெல்லாம் முடியுமா, போய் வேற வேலைய பாரு” போன்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவர்.
கிசுகிசு பேசுதல்:
உங்கள் மீது ரகசியமாக பொறாமை கொண்டிருப்பவர்கள் அல்லது உங்களை எதிரியாக நினைப்பவர்கள் உங்கள் முகத்திற்கு முன் நன்றாக நடித்துவிட்டு பின்னால் சென்று பலரிடம் உங்களைப் பற்றி தவறாக பேசலாம். அதை பிறர் வந்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் சம்பந்தப்பட்ட அந்த நபர் உங்களிடம் மிகவும் நட்புடன் பழகலாம்.
பொய்யான ஆதரவு:
நீங்கள் செய்திருக்கும் விஷயத்திற்கு உங்கள் ரகசிய எதிரி பாராட்டு தெரிவிக்கிறார் என்றால் அது உங்களுக்கு மிகவும் பொய்யாக தோன்றும். அவர்கள் அப்படி செய்வது அவர்களை அவர்களே வற்புறுத்தி செய்வது போல உங்களுக்கு தோன்றும்.
உடல் மொழிகள்:
ஒருவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பேசும் விஷயத்திற்கு கண்களை சுழற்றுவது, நக்கலாக சிரிப்பது போன்ற உடல் மொழிகளை செய்வார். அதுமட்டுமன்றி அவர்கள் உங்களை கண்ணோடு கண் பார்க்க தயங்குவது. அவர்களை பார்க்கும் போது உங்களுக்கு ஒரு வித சொல்ல முடியாத கசப்பான உணர்வு ஏற்படும்.
போட்டி மனப்பான்மை:
நீங்கள் எதை செய்தாலும் அதில் உங்களைவிட ஒரு படி மிஞ்சிவிட வேண்டும் என்று போட்டி மனப்பான்மையுடன் இருப்பர். உங்கள் சாதனையை அல்லது வெற்றியை பெரிதாக பேச மாட்டார்கள். உங்கள் முயற்சியை மிகவும் தாழ்மைப்படுத்தி பேசுவார்கள்.
குழி தோண்டுபவர்கள்:
உங்களின் ரகசிய எதிரிகள், உங்களுடன் நேராக மோதுவதற்கு பயப்படுவர். அதற்கு பதிலாக கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம், உங்களை அட்டாக் செய்து கொண்டே இருப்பார். ஏதேனும் முக்கியமான விஷயத்தில் நீங்கள் கருத்து கூறினால் அதை கண்டுகொள்ளாமல் இருப்பர். நீங்கள் ஒரு இடத்தில் முதன்மைப்படுத்தப்பட்ட ஆளாக இருந்தால் உங்களை அங்கிருந்து எப்படி விலக்க வேண்டும் என்ற வழியை பார்த்துக் கொண்டே இருப்பார்.
மேலும் படிக்க | அலுவலக அரசியலை கையாள்வது எப்படி? ஈசியான 5 வழிகள்!!
நெகட்டிவான விமர்சனங்கள்:
நீங்கள் செய்யும் வேலையில் அல்லது உங்களது திறமையில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை மிகவும் நெகட்டிவ்வாக உங்களிடம் கூறுவர். உங்களிடம் இருக்கும் குறைகளை மட்டும் பெரிதாக பேசுபவராக இருப்பார்.
தேவையற்ற வன்மம்:
சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தில் உங்கள் மீது வன்மத்தை பொழிபவராக இருப்பர். நீங்கள் எப்போதும் செய்த தவறுகளை கூட இப்போது வரை குத்தி காண்பித்துக் கொண்டே இருப்பர். நீங்கள் இருவரும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தவறு அவருடையது தான் என்றாலும் கூட மொத்த பழியையும் உங்கள் மீது திணிப்பார்.
மேலும் படிக்க | உங்களை வார்த்தையால் அட்டாக் செய்பவரை சைலண்டா வாயை மூட வைக்கலாம்! 5 வழிகள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ