வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. சில சமயம் இதில் பகிரப்படும் வீடியோக்கள் நம்மை கடும் சோகத்திலும் ஆழ்த்தி விடுகின்றன.
மனிதர்கள் மட்டுமே சொந்தங்களின் அன்பையும் இழப்பின் சோகத்தையும் உணர்கிறார்களா? மிருகங்களிலும் இவை காணப்படுகின்றனவா? கண்டிப்பாக காணப்படுகின்றன!! வாயில்லா ஜீவன்கள் வெளிப்படுத்தும் அன்பு, பாசம், பிணைப்பு ஆகியவற்றை பார்க்க ஆச்சரியமாக இருந்தாலும், இந்த அனைத்து உணர்ச்சிகளும் அவற்றுக்கு இயல்பாக உள்ள உணர்ச்சிகளே என்பதுதான் உண்மை. இதை உறுதிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த வீடியோ இது. இதில், இறந்த நபர் ஒருவருக்கு பல குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் வேளையில் ஒரு குரங்கும் அங்கு இறுதி அஞ்சலி செலுத்த வருவதை காண முடிகின்றது. இறந்த நபர் அந்த குரங்குக்கு ஆதரவாக, அதன் துணையாக இருந்தார் என்றும், அது அவரது இல்லத்துக்கு வரும்போதெல்லாம், தவறாமல் உணவளிப்பார் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் படிக்க | 12 பீர்களை ஒரே நேரத்தில் தூக்கிய பெண்! பிறகு என்ன ஆனது என்பதை பாருங்கள்!
சோகத்தில் ஆழ்த்தும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:
#viralvideo : Monkey seen at the funeral of a person, who is said to have fed it regularly, whenever it visited his residence in #Batticaloa #SriLanka
Primate is seen nudging the 'companion' who is lying motionless, to try and see if he would respond, but to no pic.twitter.com/5FJ1nzq9H5
— Sidharth.M.P (@sdhrthmp) October 19, 2022
துக்கத்தில் இருக்கும் ஏராளமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் கூட்டத்திற்கு மத்தியில், குரங்கு அந்த நபரின் உடலுக்கு அருகில் அமர்ந்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. கூட்டத்தில் சிலர் குரங்கை அங்க்கிருந்து அனுப்ப முயற்சி செய்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிகளுக்கு எந்த பலனும் இல்லை.
குரங்கு முதலில் இறந்த தனது நண்பரின் கால் அருகில் அமர்கிறது. பின்னர் மெல்ல அவரது தலை பக்கம் வருகிறது. அதன் பிறகு அந்த நபர் சுவாசிக்கிறாரா என்பதைச் சரிபார்ப்பது போல உடற்பகுதியை நோக்கி நகர்கிறது. இறந்த நபரின் கவனத்தை ஈர்ப்பதற்காக குரங்கு அன்புடன் அவரைத் தட்டுகிறது, அவரை தடவுகிறது. அந்த குரங்குக்கும் அதற்கு உணவளித்து அன்பு காட்டிய நபருக்கும் இடையே உள்ள பிணைப்பைக் காட்டும் அந்த வீடியோ பார்வையாளர்களை நெகிழ்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | பார்த்தா அழாம இருக்க முடியாது: மனதை உருக்கும் அப்பா மகன் வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ