Leopard Attack: என்னை பிடிக்கறது ஈஸி இல்ல தம்பி: போக்கு காட்டி தாக்கும் சிறுத்தை

வலைக்குள் அகப்பட்டாலும் சீற்றம் குறையாமல் சீறித் தாக்கும் சிறுத்தையின் விடாமுயற்சி ஆச்சரியமளிக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 24, 2022, 03:40 PM IST
  • வேட்டைக்கார சிறுத்தையின் சீற்றம்
  • வலைக்குள் இருந்தும் வேட்டையாடும் சிறுத்தை
Leopard Attack: என்னை பிடிக்கறது ஈஸி இல்ல தம்பி: போக்கு காட்டி தாக்கும் சிறுத்தை title=

வேட்டையாடும் விலங்குகளை பார்த்தால் பீதியில் பலரும் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று தெறித்து ஓடுவார்கள். விலங்குகளின் வேட்டைகள் திகிலையும், திகைப்பையும் வியப்பையும் கொடுப்பவை. காட்டில் இருந்து மக்கள் வசிக்கும் பகுதிக்குள் சிறுத்தைகள் நுழைவது அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது.

நாட்டுக்குள் வந்த சிறுத்தையை பத்திரமாக பிடித்து அவற்றை வனப்பகுதிகளில் விடும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தாக்குதல் என்பது திடீரென நடப்பதால் மக்களின் அச்சத்தைப் போக்க வலைவீசி விலங்குகளை பிடிப்பார்கள்.

காட்டில் இருக்கும் விலங்குகளின் வேட்டை திரில்லிங்கானது.  அதற்கு கொஞ்சமும் குறையாத அனுபவத்தைக் கொடுப்பது நாட்டிற்குள் வந்த விலங்குகளை பத்திரமாக பிடித்துச் சென்று காட்டிற்குள் விடுவது.

மேலும் படிக்க | பதுங்கிப் பாய்ந்து வெற்றிகரமாக வேட்டையாடும் சிறுத்தை

அண்மைக்காலமாக இணையதளங்களில் விலங்குகளின் வீடியோ வைரலாகிவருகிறது. விலங்குகளின் சாமார்த்தியமும் பதுங்கிப் பாயும் குணமும், கூர்மையான அனுமானிப்பும் ஆச்சரியமாக இருக்கின்றன.

விலங்குகளின் தாக்குதல்களை எதிர்பாராமல் பதிவு செய்யும் சந்தர்ப்பம் கிடைப்பவர்கள் அதை விட்டுவிடுவதிலை. எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர். அவை, விருப்பத்திற்குரிய வீடியோவாக மாறி வைரலாகிறது.

மேலும் படிக்க | கர்ஜனையால் காட்டை உலுக்கும் சிங்கம்

இணையதளங்களில் வெளியாகும் வீடியோக்களில் சில பலராலும் ரசிக்கப்பட்டாலும், அவை ஏற்படுத்தும் அச்சமும் திகைப்புமே அவை வைரலாவதற்கு காரணமாகின்றன. 

குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களும், வேட்டையாடும் விலங்கு வீடியோக்களும் அதிக அளவில் வைரலாகின்றன. வலைக்குள் அகப்பட்ட சிறுத்தை, சீறிக்கொண்டு வந்து தன்னை பிடிப்பவரை தாக்கும் வீடியோ ஒன்று பலரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வைரலாகிவருகிறது.

இந்த வீடியோ சிறுத்தையை பிடித்த பிறகு அதை பத்திரமாக கொண்டு செல்ல முயலும்போது எடுக்கப்பட்டுள்ளது. சிறுத்தை இருக்கும் இடத்திற்கு ஜீப் ஒன்றும் நிற்பதை வீடியோவில் தெரிகிறது.

வலைக்குள் சிக்கியிருந்தாலும், சிறுத்தையின் சீற்றம் குறையவில்லை. அது பாய்ந்து, தன்னை கட்டுப்படுத்த முயல்பவரை தாக்குவது அதிர்ச்சியையும் திகிலையும் கொடுக்கிறது.  

மேலும் படிக்க | பதுங்குக்குழியில் பதுங்கினாலும் பாய்ந்து வேட்டையாடும் சிறுத்தையின் பாதள வேட்டை

வைரலாகும் இந்த வீடியோ, சிறுத்தையின் விடா முயற்சியையும், அதன் சக்தியையும் காட்டுகிறது. திகைப்பைத் தரும் இந்த வீடியோ கூகுளில் டிரெண்டிங் ஆகிறது.

சில நொடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோ, அதிர்ச்சியையும் திகிலையும்  ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க | Viral Video: அட இது நான் தானா... குரங்கு குட்டியின் க்யூட் ரியாக்‌ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News