Viral Video Of A Daughter Marrying Her Own Father : நாம் சமூக வலைதளங்களில் கடந்து வரும் பல விஷயங்கள், நம்மை நாளுக்கு நாள் அதிர்ச்சிக்குள்ளாக்கி கொண்டே இருக்கிறது. இதில் சில வீடியோக்கள் நம்மை “இப்படியெல்லாம் கூட நடக்குமா? மூளை இருப்பவன் இப்படி செய்வானா?” என நம்மை கோபமுற கேள்வி கேட்க வைக்கும். ஆனால் அதன் பிறகு அதை விட மிகவும் மோசமான வேறு ஏதேனும் விஷயத்தை ஏதேனும் ஒரு தளத்தில் பார்ப்போம், உடனே இதை மறந்து விடுவோம்.
இந்தியாவை பொறுத்தவரை, அத்தை-மாமா மகளை மாமன் முறையில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது, பெரிதாக தகவறாக பார்க்கப்படுவதில்லை. ரத்த சம்பந்தம் இருப்பவர்கள் குழந்தை பெற்று கொண்டால், அது பிற்காலத்தில் ஆபத்து ஏற்படும் என்பதை பலர் கண்டுபிடித்து கூறிய பிறகும் கூட, இவ்வாறான உறவுகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு ஆங்கிலத்தில் Incest Relationship என்று பெயர். முறைப்பெண்-முறை மாமன் உறவிலேயே இத்தனை பிரச்சனை இருக்கும் போது, அப்பாவை மகள் காதலிப்பது, அண்ணன்-தங்கை உறவு வைத்துக்கொள்வது போன்ற விஷயங்களும் உலகின் பல மூளைகளில் நடைப்பெற்றுதான் வருகிறது. தற்போது இப்படியொரு சம்பவம்தான், அறங்கேறி இருக்கிறது.
வைரல் வீடியோ!
தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், 24 வயதான ஒரு பெண், தன்னை பெற்ற தந்தையையே திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதனை, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் ஜே சிங் தனது டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ, கிட்டத்தட்ட 5 லட்சம் வரையிலான வியூஸ்களை கடந்திருக்கிறது.
இந்த வீடியோவில், சிகப்பு புடவை கட்டியிருக்கும் அந்த பெண், நெற்றியில் குங்குமத்துடன் ஒருவருடன் கைக்கோர்த்துக்கொண்டு நின்று கொண்டிருக்கிறார். கூட்டத்தில் இருந்து ஒருவர், அந்த பெண்ணிடம் “இது உங்களுக்கு கேவலமாக இல்லையா?” என்று கேட்க அதற்கு அந்த அப்பாவும் மகளும், “நாங்கள் ஏன் கேவலப்பட வேண்டும்? எந்த தலைமுறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?” என்று கேட்கின்றனர்.
एक बेटी ने अपने बाप से शादी कर ली और बाप ने अपनी बेटी से शादी कर ली।
हिंदू रीति रिवाज के अनुसार सादी मंदिर में संपन्न हुई उसके बाद मीडिया से बात की किसी को अब दिक्कत नहीं होनी चाहिए दोनों सहमत हैं दोनों राजी हैं। pic.twitter.com/cSY6Yytcv5
— Jaysingh Yadav SP (@JaysinghYadavSP) November 27, 2024
மேலும் பேசிய அந்த பெண், தனக்கும் தனது தந்தைக்கும் இருக்கும் உறவு குறித்து பின்னால் பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் இந்த வீடியோவை தற்போது எடுப்பதாக கூறியிருக்கிறார்.
தொடர்ந்து, தனக்கு பல ஆண்டு காலமாக தனது தந்தை மீது காதல் இருப்பதாக கூறும் அந்த பெண், எப்போதோ இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டதாகவும், இப்போது திருமணம் செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இது, இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.
மேலும் படிக்க | சொந்த மகளை மணந்த தந்தை... அதுவும் 4வது மனைவியாகவா? - உண்மை இதுதான்!
மேலும் படிக்க | மகளின் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு தந்தை செய்த சம்பவம்.. அதிர்ச்சி தந்த ஆச்சரியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ