தமிழகம் முழுவதும் பொங்கல் விழாவும், இந்திய அளவில் மகரசங்கராந்தியும் தை 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, பாரம்பரிய விழாக்களான ஜல்லிக்கட்டுப்போட்டி, எருது விடும் விழா, மஞ்சுவிரட்டு போட்டிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் களைகட்டின. சில மாவட்டங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.
ALSO READ | Watch Video: Burj Khalifa உச்சியில் ஒரு பிரம்மிக்க வைக்கும் விளம்பரம்..!!!
இதேபோல், பிற மாநிலங்களிலும் எருது விடும் விழா, எருது வண்டி ஓட்டம் பிரபலம். அந்தவகையில், கடந்த ஆண்டு எருது வண்டி ஓட்டும் விழாவில் நெடுஞ்சாலையில் பழிவாங்கிய எருது ஒன்றின் வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுமார் 4 பேர் நான்கைந்து பேர் எருது வண்டியில் அமர்ந்திருக்கின்றனர்.
மின்னல் வேகத்தில் ஓடும் எருதுவை வண்டியில் இருப்பவர்கள் சாட்டை வைத்து அடித்துக் கொண்டு, இன்னும் வேகமாக செல்லும் வகையில் உசுபேத்துகின்றனர். அந்த வண்டிக்கு முன்னும் பின்னும் இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்களும் ஆரவாரக் குரல் எழுப்பி, எருதை முடுக்கிவிடுகின்றனர். இதேபோன்று கொஞ்ச தூரத்துக்கு செல்லும் அவர்களை, சரியான தருணம் பார்த்து எருது பழிவாங்கி விடுகிறது.
The buffalo took a perfect revenge, such people shouldn’t be called human. pic.twitter.com/6o1n3LQdQ7
— Singh Varun (@singhvarun) May 23, 2020
அதாவது நெடுஞ்சாலையில் வேகமாக ஓடும் எருது, சாலையில் நடுவே இருக்கும் சுவற்றின் மீது வேண்டுமென்ற மோதிவிட்டு அது மட்டும் தப்பித் கொள்கிறது. அப்போது, எருது வண்டியின் சக்கரங்கள் தடுப்பில் மோதி தூக்கியடித்தவுடன், வண்டியில் இருப்பவர்கள் அனைவரும் சாலையில் தேங்காய் போல் ஆங்காங்கே சிதறி விழுகின்றனர். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், சாலையில் பெரிய வாகனங்கள் ஏதும் வரவில்லை. ஒரே ஒரு இரு சக்கர வாகனம் மட்டுமே வருகிறது. பெரியவாகனம் வந்திருந்தால், அவர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளித்திருக்க முடியாது. கடந்த ஆண்டே இந்த வீடியோ வெளி வந்திருந்தாலும், பொங்கலையொட்டி இந்த ஆண்டும் வைரலாகியுள்ளது.,
ALSO READ | அடிச்சிட்டான்யா அடிச்சிட்டான்!! ஆட வந்த பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி: வீடியோ வைரல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR