சாலையில் விழுந்த பணத்தை வைத்திருப்பது சட்டவிரோதமானது: போலீசார் எச்சரிக்கை

சாலை முழுவதும் பறந்து சிதறிய டாலர்கள். சிதறிக்கிடந்த டாலர்களை இரு கைகளாலும் வேக வேகமாக சேகரிக்கத் தொடங்கிய மக்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 12, 2019, 05:35 PM IST
சாலையில் விழுந்த பணத்தை வைத்திருப்பது சட்டவிரோதமானது: போலீசார் எச்சரிக்கை title=

புதுடெல்லி: உங்களுக்கு முன்னால் பணம் பறந்து வந்தாலோ அல்லது சிதறிக்கிடந்தாளோ நீங்களே உங்களை கட்டுப்படுத்த முடியாது. இதேபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் ஒரு நெடுஞ்சாலையில் நடந்ததுள்ளது. அந்த நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டு இருந்த டாலர்கள் நிறைந்த ஒரு டிரக்கிலிருந்து திடீரென வெளிய வீசத்தொடங்கியது. இந்த டாலர்கள் சாலை முழுவதும் பறந்து சிதறியது. 

இதைப் பார்த்த சாலையில் சென்றுக்கொண்டிருந்த மக்கள் தங்கள் கார்களை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, சிதறிக்கிடந்த டாலர்களை இரு கைகளாலும் சேகரிக்கத் தொடங்கினர். மக்கள் அதிகளவில் டாலர்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் அவசர அவசரமாக செயல்பட்டதால் ஒருவருக்கொருவர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பொழுது அந்த சாலை வழியாக வந்த சிலர், இந்த சம்பவத்தை வீடியோவை பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம், வடக்கு அட்லாண்டாவின் இன்டர்ஸ்டேட் நெடுஞ்சாலை 285-ல் டாலர்கள் நிறைந்த ஒரு டிரக் சென்றுள்ளது. அந்த லாரியின் கதவுகள் திறந்திருந்ததால் சாலையிலேயே டாலர்கள் விழ ஆரம்பித்துள்ளன. அதன் பிறகு, அதைப் பார்த்தவர்கள், டாலர்களை எடுத்து சென்றுள்ளனர். டிரக் நிறுவனம் சுமார் 1,75,000 டாலர்கள் (சுமார் ரூ.1.20 கோடி) கொள்ளையடிக்கப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது.

 

தகவல் கிடைத்ததும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு போலீஸ் வந்தும், மக்கள் டாலர்களை எடுப்பதை நிறுத்தவில்லை. சாலையில் எடுக்கப்பட்ட டாலரை திருப்பித் தருமாறு டென்வுடி போலீசார் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். லாரியில் இருந்து சாலையில் விழுந்த பணத்தை வைத்திருப்பது சட்டவிரோதமானது, எனவே அதை திருப்பித் தரவும். இல்லை என்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கூறியது. அதனபிறகு 6 பேர் மட்டுமே 4,400 டாலர்களுக்கு பணத்தை போலீசுக்கு திருப்பி தந்துள்ளனர்.

Trending News