Cartwheel Galaxy: சுழலும் வண்ண வளையத்தை வெளிப்படுத்தும் கார்ட்வீல் கேலக்ஸியின் புதிய படம்

James Webb Space Telescope: கார்ட்வீல் கேலக்ஸியின் வண்ண வளையத்தை இதுவரை இல்லாத அளவு தெளிவாக வெளிப்படுத்தும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 3, 2022, 07:27 AM IST
  • கார்ட்வீல் கேலக்ஸியின் வண்ண வளையம்
  • பிரபஞ்சத்தை துல்லியமாய் படம் பிடிக்கும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி
  • இதுவரை இல்லாத அளவு தெளிவான புகைப்படங்களை எடுக்கும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி
Cartwheel Galaxy: சுழலும் வண்ண வளையத்தை வெளிப்படுத்தும் கார்ட்வீல் கேலக்ஸியின் புதிய படம் title=

James Webb Space Telescope: ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் கிடைத்த புகைப்படங்கள் கார்ட்வீல் கேலக்ஸியின் வண்ண வளையத்தை இதுவரை இல்லாத அளவு தெளிவாக வெளிப்படுத்துகிறது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) செவ்வாயன்று தெரிவித்தன. இந்த படத்தில், ஹப்பிள் தொலைநோக்கியுடன் ஒப்பிடுகையில், வெப் தொலைநோக்கியானது, அரிய வளைய விண்மீனின் படங்களை இதற்கு முன்பு எடுக்கப்பட்டதை விட மிக அதிகமான தெளிவுடன் எடுத்துள்ளது. இதில், பெரிய அளவிலான தூசிகளை தெளிவாக பார்க்க முடிகிறது. ​​கார்ட்வீல், பூமியிலிருந்து 500 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ளது.

நாசா மற்றும் ESA ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து கார்ட்வீல் கேலக்ஸி தொடர்பாக கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கையின்படி, இரண்டு விண்மீன் திரள்களுக்கு இடையே நேருக்கு நேர் மோதலின் தாக்கம் விண்மீன் மையத்திலிருந்து இரண்டு வளையங்களை விரிவுபடுத்தியதாக தெரிவிக்கிறது.

மேலும் படிக்க | பிரபஞ்சத்தின் அழகு கிரகம் செவ்வாய்: சிவப்பும் நீலமுமாய் ஜொலிக்கும் படத்தை வெளியிட்ட நாசா

வெளி வளையம் சுமார் 440 மில்லியன் ஆண்டுகளாக பிரபஞ்சத்தில் விரிவடைந்து வருவதாகவும், அதே நேரத்தில் ஒரு சிறிய வெள்ளை வளையம் விண்மீன் மையத்திற்கு நெருக்கமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது, புதிய நட்சத்திரங்களின் உருவாக்கத்தைத் தூண்டி, வெளிப்புற வளையம், அதன் வண்ணமயமான கோடுகளுடன் விரிவடைகிறது. அகச்சிவப்பு ஒளியைக் கண்டறியும் திறனின் காரணமாக கார்ட்வீல் கேலக்ஸியின் பார்வையை மறைக்காமல் வெப் தொலைநோக்கி படத்தைப் பிடிக்க முடிந்தது என்று நாசாவும் ஈஎஸ்ஏவும் நம்புகின்றன.

மேலும் படிக்க | GALEX தொலைநோக்கி வெளிப்படுத்தும் பிரபஞ்ச ரகசியம்

அதன் மையப் பகுதியில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையின் நடத்தை பற்றிய புதிய விவரங்களை வெளிப்படுத்துவதன் மூலம், ஹைட்ரோகார்பன்கள் மற்றும் பிற இரசாயனங்கள் நிறைந்த பகுதிகளைக் கண்டறிவது சாத்தியமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்னும் கூடுதலான விண்மீன் திரள்கள் அவற்றின் பின்னால் காணப்பட்டாலும், இரண்டு சிறிய விண்மீன் திரள்கள் கார்ட்வீலுக்குப் பின்னால் பிரகாசமாக பிரகாசிக்கிறது மற்றும் அது இன்னும் "மிகவும் இடைநிலை நிலையில்" இருப்பதைக் காட்டுகிறது.

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மிகவும் முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்புகளை தொடங்கிவிட்டது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப் படங்களை நாசா வெளியிடத் தொடங்கிய சில நாட்களிலேயே, பல்வேறு புதிய விஞ்ஞான பரிணாமங்கள் தெரிய வந்துள்ளது. இதுவரை இல்லாத அளவு தெளிவுடன் பிரபஞ்சத்தின் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் எடுத்து வருகிறது.

மேலும் படிக்க | என்னது? ஏலியன்கள் பூமியை சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்களா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News