SIP: ரூ.25,000 சம்பளத்திலும் கோடீஸ்வரர் ஆகலாம்... பரஸ்பர நிதியம் கை கொடுக்கும்

SIP Investment Tips: பங்குச்சந்தையில் சிறிது ஏற்ற இறக்கம் காணப்படுவதால், பரஸ்பர நிதியம் என்னும் எஸ்ஐபி முதலீடு பலரின் தேர்வாக உள்ளது. இதன் மூலம் மிகச் சிறிய அளவிலான தொகையை கூட முதலீடு செய்து செய்து பணத்தை பன்மடங்காக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதியங்கள், சிறந்த வருமானத்தை அளிக்கின்றனர். இளம் வயதிலேயே திட்டமிட்டு சேமிக்க தொடங்கினால், கோடீஸ்வரர் ஆகும் கனவை எளிதில் நிறைவேற்றலாம்.

 

1 /8

Mutual Fund Investment Tips: பரஸ்பர நிதிய முதலீடுகள், சாமானிய மக்களும் சிறிய அளவில் முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கின்றனர். தினம் நூறு ரூபாய் என்ற அளவில் சேமித்தால் கூட, நீங்கள் எளிதில் பணக்காரர் ஆகலாம். அதற்கு தேவை சரியான திட்டமிடல் மற்றும் தொடர் முதலீடு.  

2 /8

இன்றைய காலகட்டத்தில், மாதம் 3000 ரூபாய் சேமிப்பது என்பது எல்லோரும் செய்யக்கூடிய ஒன்றுதான். அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், ஆயிரங்கள் கோடிகளாகும். குறைவாக சம்பளம் வாங்குபவர்கள் கூட சிறிது சிக்கனமாக இருந்தால், எளிதாக 3000 ரூபாய் சேர்க்கலாம்.

3 /8

மியூச்சுவல் ஃபண்டுகள் என்னும் பரஸ்பர நிதியம் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டம் ஆகும். நேரடியாக பங்குகளில் பணத்தை முதலீடு செய்வதை விட, இதில் ஆபத்துக் குறைவு என்பதால், பலரின் தேர்வாக உள்ளது.  

4 /8

பரஸ்பர நிதியத்தில் நீண்ட கால முதலீட்டிற்கு குறைந்தபட்சம் 12 சதவீத கிடைக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆனால் சமீப காலமாக, பரஸ்பர நிதியங்கள் மூலம் 20% முதல் 40% வரை வருமானம் கிடைத்துள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.

5 /8

மேலும் பரஸ்பர நிதியங்களில் கூட்டு வட்டியின் லாபம் கிடைப்பதால் கிடைக்கும் வருமானம் பன்மடங்கு ஆகிறது. இதனால், மாதம் ரூபாய் 3000 முதலீடு செய்தால், 30 வருடங்களில் கோடீஸ்வரன் ஆகலாம். 30 வருடங்களில் உங்கள் முதலீட்டுத் தொகை, 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக இருக்கும். ஆனால் உங்கள் கையில் உள்ள பணம் சுமார் ஒரு கோடியே 5 லட்சமாக இருக்கும்.  

6 /8

உங்கள் முதலீட்டை சிறிதளவு அதிகரித்து மாதம் தோறும் ரூபாய் 6 ஆயிரம் முதலீடு செய்தால் 24 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்த உலகத்தின் அளவு, ரூ.17,28,000 என்ற அளவில் இருக்கும். ஆனால் இருபது நான்கு ஆண்டுகள் முடிவில், ஒரு கோடியே 36 ஆயிரம் ரூபாய் உங்களிடம் இருக்கும்.  

7 /8

உங்கள் முதலீட்டை மேலும் சிறிதளவு கூட்டி, தினம் 500 ரூபாய் என்ற அளவில், மாதம் 15 ஆயிரம் முதலீடு செய்தால், 17 வருடங்களிலேயே கோடிக்கு அதிபதியாகலாம். 17 வருடங்களில் உங்கள் முதலீட்டுத் தொகை ரூ.30,60,000  ஆகவும், 17 வருட முடிவில் உங்களுக்கு கிடைக்கும் பணம் சுமார் ஒரு கோடியே 18000 ரூபாய் என்று அளவிலும் இருக்கும்.

8 /8

முக்கிய குறிப்பு - பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.