எச்சரிக்கை... மீண்டும் சூடு படுத்தினால் விஷமாகும் சில உணவுகள்

இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையில், நம்மில் பெரும்பாலானோருக்கு, பிரஷ்ஷாக உணவை சமைத்து உண்ணும் பழக்கம் இல்லை. ஏன் தினமும் சமைக்கும் பழக்கம் கூட பலருக்கு இல்லை.

பிரிட்ஜ் வந்ததன் பின்னர், நேரம் கிடைக்கும் போது சமைத்துவிட்டு, அதனை பிரிட்ஜில் வைத்து, பல நாட்களுக்கு பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்த, உணவுகள் வீணாவதை தவிர்க்க என இதற்கு பல காரணங்களை நாம் கூறலாம்.

1 /9

வீட்டுக்குள் இருக்கும் விலை உயர்ந்த குப்பை தொட்டி தான் பிரிட்ஜ். உணவுகள் வீணாவதை தவிர்க்க நேரத்தை மிச்சப்படுத்த என, நாம் பிரிட்ஜில் உணவை சேமித்து மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுகிறோம். ஆனால் சில உணவுகளை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது, சில சமயங்களில் உயிருக்கே உலை வைத்து விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.  

2 /9

கீரை வகைகள்: கீரையை நறுக்கி சமைக்க அதிக நேரம் பிடிக்கும் என்பதால், பலர், கீரையை நறுக்கி வேகவைத்து, அதை பிரிட்ஜில் வைத்து வேண்டும்போது பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இது மிகவும் ஆபத்து. மீண்டும் சூடுபடுத்தப்படும் போது, கீரைகளில் உள்ள நைட்ரேட்டுகள், ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் கலவைகளாக மாறிவிடுகிறது. எனவே இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

3 /9

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கையும் நாம் வேகவைத்து, தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ள ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் உள்ளது. உருளைக்கிழங்கை குளிர்விக்கும் போது, அதில் உள்ள ஸ்டார்ச் மூலக்கூறுகள், மாறுவதால், அவை செரிமான பிரச்சனைகளை உண்டாக்குகின்றன.

4 /9

காளான்கள்: புரதச் சத்து அதிகம் உள்ள காளான் உணவுகளை, மீண்டும் சூடு படுத்துவதால், உள்ளக் ஆரோக்கிய கலவைகள் சிதையும் வாய்ப்பு உள்ளது. இதனால் அதன் சுவை கெடுவதோடு, அதன் ஊட்டச்சத்து மதிப்பை நாம் இழந்து விடுவோம்.

5 /9

முட்டையை சமைத்து பிரிட்ஜில் வைத்து, அதனை மீண்டும் சூடுபடுத்தும் போது, அதில் உள்ள புரதங்கள் உடைந்து, ஆரோக்கியத்தை பாதிக்கும் கலவைகளை உருவாக்குகின்றன. முட்டையை மீண்டும் சூடாக்குவது, பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும்.  

6 /9

சாதம்: சமைத்த அரிசியும், உருளைக்கிழங்கை போலவே, பிரிட்ஜில் வைத்து பின்னர் மீண்டும் சூடு படுத்தும் போது, அதில் உள்ள மாவுச்சத்து அதிகரிக்கும் அதே நேரத்தில், செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். சில சமயங்களில் ஃபுட் பாய்சன் ஏற்படும் அபாயமும் உண்டு.  

7 /9

இறைச்சி உணவுகள்: புரதச்சத்து மிக்க இறைச்சி உணவுகளை மீண்டும் சூடு படுத்தும் போது, அதில் உள்ள புரதங்கள் உடைந்து, ஊட்டச்சத்துக்கள் குறைவதோடு, பாக்டீரியா பெருகி, விஷமாக மாறி சில சமயங்களில் உயிரை கூட பறித்து விடும்.

8 /9

சமையல் எண்ணெய்: சமையல் எண்ணெயை மீண்டும் சூடு படுத்தும் போது, அதாவது சுட்ட எண்ணெய் பயன்படுத்தும் போது, அதில் லிப்பிட் பெராக்ஸைட் எனப்படும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் உருவாகும். வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படும். இது இதய ஆரோக்கியத்தை பெரிதும் பாதிப்பதோடு உடல் பருமனுக்கும் வழிவகுக்கும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.