ஓடிடியில் வெளியான பிளாக்பஸ்டர் மேக்ஸ் படம்! எந்த தளத்தில் தெரியுமா?

Max Movie OTT: கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான “மேக்ஸ்” திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

1 /6

இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் பாட்ஷா கிச்சா சுதீப்பின் மாஸ் அவதாரத்தில் உருவாகியுள்ள “மேக்ஸ்” திரைப்படம்  பிரம்மாண்ட ஆக்சன் அதிரடிப் படமாகும்.

2 /6

2024 ஆம் ஆண்டின் மிக அதிக வருவாய் ஈட்டிய கன்னடப் படமான “மேக்ஸ்” இன்று முதல் ZEE5ல் கன்னடத்துடன், தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்டு ஸ்ட்ரீமாகிறது.

3 /6

இந்த கதையானது  தனி ஒருவனின் தைரியம், சர்வைவல் மற்றும் பழிவாங்கலைச் சுற்றி ஒரு பரபரப்பான திரை அனுபவத்தைத் தருகிறது. ஒவ்வொரு நொடியும் பரபரக்க வைக்கும்,  இப்படம் திரையரங்குகளில் பெரும் வெற்றியை பெற்றது.

4 /6

பாட்ஷா சுதீப்புடன் இணைந்து, இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சாம்யுக்தா ஹோர்னாட், ஸுக்ருதா வாகிளே, சுனில் மற்றும் அனிரூத் பட் போன்ற பல பிரபல நடிகர்கள் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர்.

5 /6

மேக்ஸ் படம் 2024 ஆம் ஆண்டின் மிக அதிக வருவாய் ஈட்டிய கன்னடப் படம் எனும் சாதனையை செய்துள்ளது.  தற்போது ZEE5 இல் இப்படம் டிஜிட்டல் பிரீமியர் ஆகிறது.  

6 /6

“Max” திரைப்படத்தின் கதை: போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள அர்ஜூன் தனது பதவியேற்புக்கு ஒரு நாள் முன் அந்த ஊருக்கு வருகிறார். அந்த ஒரு இரவில் நடைபெறும் அதிரடி திருப்பங்கள், பரபர சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.