உடல் பருமன் குறைய சிறந்த காலை உணவு எவ்வளவு முக்கியமோ, அதே போல் இரவு உணவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை சரியாக தேர்ந்தெடுத்தால், உடல் பருமனை குறைப்பது எளிது. ஏனெனில் உணவு முறைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பதை மறுக்க இயலாது.
உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சி மட்டும் போதாது. ஆரோக்கியமான உணவு முறை அவசியம் தேவை. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த டயட் முறையை பின்பற்றவில்லை என்றால், எவ்வளவு முயற்சி செய்தாலும் உடல் எடை குறையாது.
Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது ஒரு நோய் அல்ல என்றாலும், அதனால் நீரிழிவு, உடல் பருமன், இதய நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால், உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
உடல் கொழுப்பை எரித்து, எடையைக் குறைக்க இரவில் உட்கொள்ளக்கூடிய சில சிறந்த உணவுப் பொருட்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். அதோ இரவு உணவில் நேரமும் முக்கியத்துவம் பெறுகிறது. இரவு உணவை, எவ்வளவு சீக்கிரம் முடிக்கிறோமோ அந்த அளவிற்கு, நல்ல பலன் கொடுக்கும். படுக்கைக்கு செல்வதற்கு 2 மணி நேரம் முன்னதாக டின்னரை முடித்து விட வேண்டும்.
ஓட்ஸ்: உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ஓட்ஸ் நல்ல தேர்வாக இருக்கும். ஓட்ஸ் தோசை, ஓட்ஸ் கஞ்சி போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம். ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. குறைவான கலோரிகள் கொண்டதால் எடை இழக்க சிறந்தது. இரவு உணவில் ஓட்ஸ் சேர்த்துக்கொள்வது கொழுப்பை எரிக்க உதவுகிறது.
பச்சை காய்கறிகள்: பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அவற்றில் நார்சத்து அதிக அளவில் உள்ளதோடு, ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை எடையைக் குறைக்கவும் அதிக கலோரிகளை எரிக்கவும் உதவுகின்றன. நீங்கள் உப்புமா, தோசை என எதை தயாரித்தாலும், அதில் பச்சை காய்கறிகளை சேர்ப்பது. அல்லது சாப்பாத்தி சப்பிடும் போது, பச்சை காய்கறியினால் தயாரித்த சைட் டிஷ் பயன்படுத்துவது ஆகியவை பலன் கொடுக்கும்.
தயிர்: இரவில், சிறந்த ப்ரோபயோடிக் உணவான தயிர் சாப்பிடுவது உடல் எடையை குறைக்கும். தயிரில் உள்ள பண்புகள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, எலும்புகளை பலப்படுத்துகிறது. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. தயிரை உங்களுக்கு பிடித்த வகையில், பச்சடி, ராய்தா என தயாரித்து உண்ணலாம்.
பேரிச்சம்பழம்: உடல் எடையை குறைக்க விரும்பினால் இரவில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது நல்ல தேர்வாக இருக்கும். பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பேரீச்சம் பகழத்தை சாப்பிடும் முன் பாலில் ஊறவைப்பது நல்லது. இதனால், ஊட்டசத்து மதிப்பு அதிகமாவதோடு, உங்கள் எடை இழப்பு முயற்சிகளுக்கு பெரிதும் உதவும்.
எலுமிச்சை: காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை பானம் குடிப்பதைப் போலவே, இரவில் எலுமிச்சை பானத்தைஒ குடிப்பதால், செரிமானம் மேம்படும். கொழுப்பை எரிக்க உதவுவதன் மூலம் எடையைக் குறைக்கலாம். இந்த எளிய பானம் சிறந்த ஆரோக்கியத்திற்காக உங்கள் இரவு வழக்கத்தின் புத்துணர்ச்சி மற்றும் பயனுள்ள பகுதியாக இருக்கும்.
இலகுவான உணவு: இரவில் லேசான உணவை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுடன், பல உடல்நலக் குறைபாடுகளை நீக்க உதவுகிறது. லேசான உணவை உட்கொள்வதுடன், இரவில் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பதன் மூலம் உடல் எடையை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். இரவில் நீங்கள் சாப்பிடுவதைப் பற்றி புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.