காதலர்களின் இதயங்களில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்த ரோஜாவிற்கு தனி மதிப்பு உண்டு. பலரும் அறியாத விஷயங்கள் இந்த வண்ண ரோஜாக்களில் நிறைந்துள்ளன. ஆண்டுதோறும் காதலர் தினத்தையொட்டி பல்வேறு வகையான தினங்கள் இருக்கிறது. அதில் முதலாவதாகக் கொண்டாடப்படும் ரோஜா தினத்தின் சிறப்பான பண்புகள் பலருக்கும் தெரியாது. இதுபற்றி இங்குப் பார்க்கலாம்.
புது வருடம் துவங்கியதும் விஷேசமான நாட்கள், பண்டிகை மற்றும் விழாக்கள் வரிசையாக வந்து நம்மைக் குஷி செய்கிறது. அதுபோல் காதலர்களை உற்சாகப்படுத்தவும், காதலுக்கு மதிப்புக்கொடுக்கவும் பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ரோஸ் டே, சாக்லெட் டே, டெடி டே உள்ளிட்ட பலவிதமான தினங்கள் காதலர்கள் கொண்டாடுவர். இதில் முதல் நாளில் வரும் ரோஜா தினம் காதலர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷாலான தினம். தங்கள் அன்பு காதலிக்கு ரோஜாக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவர். ஆனால் இதன் ரகசிய பண்புகள் பலருக்கும் தெரியாது. எதற்காக ரோஜா கொடுக்கின்றனர் என்று அறிந்திருக்க மாட்டார்கள். இதுபற்றி உங்களுக்காக இந்த தொகுப்பு விளக்குகிறது.
காதல் மழை காற்றில் விட்டாலும் இந்த ரோஜா காதலைக் கூறும். அதுபோல் தங்கள் அன்பை வெளிப்படுத்த வசீகரிக்கும் வாசனை நிறைந்த ரோஜாவை முதலில் கொடுப்பர். இந்த வாசனை மனதை அமைதிப்படுத்தி ஆர்வத்தைத் தூண்டுகிறது. ரோஜா கொடுப்பவரின் அன்பு ரோஜாவின் வசீகரமான வாசனையுடன் வெளிப்படுத்துகிறது.
சிவப்பு ரோஜாக்கள் அன்பு மற்றும் ஆர்வத்தை அடையாளப்படுத்துகிறது. காதலர் தினத்தின் முக்கிய அடையாளம் ரோஜா. இது பாசத்தை வெளிப்படுத்துகிறது.
இளஞ்சிவப்பு ரோஜா: இந்த ரோஜா நன்றியுணர்வு, இனிமையான குணம் போன்றவை காட்டுகிறது. உள்ளார்ந்த அன்பை இந்த நிறம் கௌரவிப்பதாகச் சொல்கின்றன.
வெள்ளை ரோஜா: இந்த ரோஜாக்கள் அமைதி, தூய்மை மற்றும் புதிய தொடக்கம் போன்றவை குறிக்கிறது. பெரும்பாலும் இதனைத் திருமணங்களில் பயன்படுத்துவர். மன்னிப்பு கேட்பது அல்லது உறவுகளில் நம்பிக்கையைப் பலப்படுத்துவது உள்ளிட்டவை வெளிப்படுத்துகிறது.
மஞ்சள் ரோஜா: இது நட்பு, மகிழ்ச்சி மற்றும் பிணைப்பு குறிக்கின்றன, அன்புரியர்வர்களின் மனதைக் கவர இந்த நிற ரோஜா உகந்ததாகச் சொல்கின்றன.
ஆரஞ்சு ரோஜா: ஆர்வம், உற்சாகம் மற்றும் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. உறவுகளின் வெற்றியைக் கொண்டாட இந்த ரோஜா சிறந்ததாகச் சொல்கின்றன.
லாவெண்டர் ரோஜா: லாவெண்டர் ரோஜாக்கள் தன்னுடைய வசீகரிக்கும் வண்ணத்தால் முதல் பார்வையிலேயே கவர்கிறது. அன்பு மற்றும் தனித்துவ இணைப்பைக் காட்டுகிறது.
பீச் ரோஜா: நேர்மை, அரவணைப்பு மற்றும் நன்றியுணர்வை குறிக்கின்றன. ஒருவருக்கு நன்றி தெரிவிக்க அல்லது நெருக்கமான உறவைக்காட்ட இந்த ரோஜா ஏற்றவை.
ரோஜாக்களின் கலப்பு பூங்கொத்து: பல்வேறு ரோஜாக்களின் அர்த்தங்களை ஒன்றிணைத்து ஒட்டுமொத்த அன்பை உருவாக்குகிறது.