Kangana Ranaut Emergency Movie Special Screening :பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகியுள்ள எமர்ஜென்ஸி திரைப்படத்தின் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் நடைப்பெற்றது.
Kangana Ranaut Emergency Movie Special Screening : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம், எமர்ஜென்சி. இந்த படத்தில் கங்கனா ரணாவத் நடித்து, அவரே படத்தை இயக்கியும் இருக்கிறார். இதன் ஸ்பெஷல் காட்சி நாக்பூரில் நடந்தது. இதையடுத்து அது குறித்த சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது எமர்ஜென்சி. இது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்த படமாகும்.
எமர்ஜென்சி படம், ஜனவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னர் இப்படத்தின் பிரத்யேக காட்சி நாக்பூரில் நடைப்பெற்றது.
இந்த ஸ்பெஷல் காட்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில், பாலிவுட் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த சமூக வலைதள பதிவில், கங்கனா ரணாவத்தை புகழ்ந்திருந்தார்.
இது, கங்கனா ரனாவத் நடித்து இயக்கும் முதல் படமாகும். இந்த படத்தில் இவருடன் சேர்ந்து அனுபம் கெர், மஹிமா சௌத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படம், ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கிற்கு பிறகு பலர் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
இந்த படத்தை தியேட்டரில் பார்க்க மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.