நாய்களுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள் என்னென்ன? இதெல்லாம் ரொம்ப ஆபத்து!

நம்மில் பலர் வளர்க்கும் நாய்களை நம் குடும்பத்தில் உள்ள ஒருவராக நடத்துவதுண்டு. இந்நிலையில் நாம் வளர்க்கும் நாய்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.  

நம்மில் பலர் வளர்க்கும் நாய்களை நம் குடும்பத்தில் உள்ள ஒருவராக நடத்துவதுண்டு. சமீபத்தில் கூட கோவையில் தான் வளர்த்த நாய் உயிரிழந்த நிலையில், உரிமையாளர் மருத்துவமனையில் வைத்து கதறி அழுத வீடியோ வைராலானது. இப்படி தனது குடும்பத்தில் ஒருவராக பார்க்கையில் நமது வளர்ப்பு நாய்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை அளிக்கிறோம் என்பது அவசியம். சில மனித உணவுகளே வளர்ப்பு பிராணிகளுக்கு ஆபாத்தானதாக அமைகிறது. அப்படி மிக ஆபத்தான உணவுகளின் பட்டியலை இங்கு தொகுத்துள்ளோம். 

1 /8

சாக்லேட்  என்பது நமது வீட்டில் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். இது நாய்களுக்கு ஆபத்தானதாக அமையலாம். இதில்  தியோப்ரோமைன்  உள்ளது. குறிப்பாக  டார்க்   சாக்லேட்   பேக்கிங்   சாக்லேட்  ஆபத்தானவை. இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு,  வலிப்புத்தாக்கங்கள்   ஏற்படலாம் . 

2 /8

திராட்சை மற்றும் உலர் திராட்சை மனிதர்களுக்கு ஆரோக்கியமாக கருதப்பட்டாலும், நாய்களுக்கு சிறுநீரா செயலிழப்பை ஏற்படுத்துகிறது. இதனை உட்கொண்டாலும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட கூடும். 

3 /8

வெங்காயம் மற்றும் பூண்டு நாயின் இரத்த சிவப்பணுக்களுக்கு  ஆக்ஸிஜனேற்ற  சேதத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளன. அதாவது இரத்த  சிவப்பணுக்களைக்  குறைத்து மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. அறிகுறியாக  பலவீனம் , வாந்தி, வயிற்றுப்போக்கு  உள்ளிட்டவை  ஏற்படலாம். இதனால் நாய்கள் மரணிக்கவும் கூடும்.

4 /8

சைலிட்டால்  என்பது சர்க்கரை இல்லாத பசை. இது  சாக்லேட்ஸ் ,  பேக்கரி  பொருட்கள்,  டூத் பேஸ்ட்டில் கூட  காணப்படும். இது  மனிதர்களுக்குப்  பாதுகாப்பானது என்றாலும் நாய்களுக்கு மிகவும் ஆபத்தானது.  சைலிட்டால்  இரத்த சர்க்கரைக் குறைவு, கல்லீரல் செயலிழப்பு  போன்றவற்றை  ஏற்படுத்துகிறது. 

5 /8

மக்காடமியா நட்ஸ் நாய்களுக்கு மிகவும் ஆபத்தானதாகக் காணப்படுகிறது. இது பலவீனம், வாந்தி, நடுக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. உடனடி மருத்துவச் சிகிச்சை கொடுக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தும். 

6 /8

காஃபின் என்பது மத்திய நரம்பு மண்டலத்தையும் இதயத்தையும் பாதிக்கும். காபி, தேநீர், எனர்ஜி டிரிங் போன்றவற்றில் காணப்படுகிறது. நாய்கள் காஃபினை உட்கொள்ளும்போது, சுவாசம், இதயத்துடிப்பு, தசை நடுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.   

7 /8

அவகோடாவில் பெர்சின் என்ற பொருள் உள்ளது. நாய்கள் உட்பட பல விலங்குகளுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. சிறிய அளவு அவகோடா பழங்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவகைகளுக்கு வழிவகுக்கும். 

8 /8

ஈஸ்ட் சேர்த்து தயாரிக்கப்படும் பச்சை மாவை நாய்கள் உட்கொண்டால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அது வயிற்றில் விரிவடைந்து வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.