1000 கோடி கொடுங்கள்... டிவி நிர்வாகத்திடம் டிமாண்ட் வைத்த சல்மான் கான்?

பிக்பாஸ் 16ஆவது சீசனை தொகுத்து வழங்க நடிகர் சல்மான் கான் 1,050 கோடி ரூபாய் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : Jul 15, 2022, 06:08 PM IST
  • ஹிந்தியில் பிக்பாஸ் 16ஆவது சீசன் தொடங்கவிருக்கிறது
  • இதை தொகுத்து வழங்க சல்மான் கான் 1000 கோடி ரூபாய் ஊதியம் கேட்டாராம்
 1000 கோடி கொடுங்கள்... டிவி நிர்வாகத்திடம் டிமாண்ட் வைத்த சல்மான் கான்? title=

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி அதிரிபுதிரி ஹிட்டடித்துள்ளது. 

தமிழ் பிக்பாஸை முதலில் கமல் தொகுத்து வழங்க அடுத்ததாக சிம்பு தொகுத்து வழங்கினார். தற்போது மீண்டும் கமலே பிக்பாஸுக்கு வரப்போவதாக கூறப்படுகிறது.

Salman Khan

அதேபோல் ஹிந்தி பிக்பாஸை பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் கடந்த 13 வருடங்களாக தொகுத்து வழங்கிவருகிறார். இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பிக்பாட் 16ஆவது சீசனையும் சல்மானே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | இதற்காகத்தான் நிர்வாணமாக நடித்தேன் - பவி டீச்சர் ஓபன் டாக்

ஆனால், இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற அவர் விரும்புவதாகவும் டிவி நிர்வாகம்தான் அவரை விடவில்லை எனவும் பாலிவுட்டில் பேச்சு இருக்கிறது. இதற்கிடையே பிக்பாஸ் 16ல் போட்டியிட இருக்கும் போட்டியாளர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Salman Khan

இந்நிலையில் பிக்பாஸ் 16ஆவது சீசனை தொகுத்து வழங்குவதற்காக 1,050 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டிவி நிர்வாகம் ஊதியத்தை குறைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாம். ஆனால், 1000 கோடி வந்தால்தான் நான் பிக்பாஸுக்குள் வருவேன் என சல்மான் கான் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்.

 

பலமுறை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முயற்சி செய்த சல்மான் கான் இந்த முறை அதிக சம்பளம் கேட்டதால் டிவி நிர்வாகமே அவரை விடுவித்துவிடும். அதனால்தான் அவர் இவ்வளவு பெரிய சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News