தமிழ் திரையுலகின் ஆக்ஷன் ஹீரோக்களுள் ஒருவர், விஷால். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் இவர், புதிதான கதை கொண்ட படங்களில் நடிக்க தயங்குவதில்லை. அப்படி அவர் நடித்துள்ள திரைப்படம்தான், மார்க் ஆண்டனி.
மார்க் ஆண்டனி:
அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பாகீரா, செம உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில பிரபலமான இயக்குநர், ஆதிக் ரவிச்சந்திரன். இவர், விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவை டைம் ட்ராவல் கதையில் நடிக்க வைத்த படம்தான், மார்க் ஆண்டனி. இந்த படத்தில் சில்க் ஸ்மிதா போல ஒரு பெண் நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் வெளியான போதே ரசிகர்கள் இதற்கு நல்ல வரவேற்பினை கொடுத்தனர். படம், நேற்று (செப்டம்பர் 15) வெளியானது.
மேலும் படிக்க | ஒரு வழியா தொப்பியை கழட்டிய சிவகார்த்திகேயன்.. புதிய லுக்கில் செம மாஸ்
வசூல்:
தமிழகத்தில் 500 ஸ்கிரீனில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. உலகளவிலும் பல திரையரங்குகளில் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. அதன்படி முதல் நாளே இந்தியாவில் மட்டும் இப்படம் 11.55 கோடி ரூபாய் வரை மார்க் ஆண்டனி படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுவரை வெளியான விஷால் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆண்டில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களில் மார்க் ஆண்டனி படம் 7ஆவது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் நாள் வசூல் நிலவத்தை பொறுத்தவரை, இந்த திரைப்படம் 7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய வசூல் என்னவாக இருக்கும்..?
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வந்ததை போலவே விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளான திங்கட்கிழமையும் மக்கள் மார்க் ஆண்டனி திரையிட்ட தியேட்டர்களுக்கு படையெடுத்த நிலையில், 4 நாட்களில் 50 கோடி வசூல் வேட்டையை விஷால் படம் நடத்தியுள்ளது என்கின்றனர். 55 கோடி ரூபாய் வசூல் இதுவரை வந்துள்ளதாகவும் 2வது வார முடிவில் கண்டிப்பாக 100 கோடி வசூலை இந்த படம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#MarkAntony Joins the 50Cr club in Just 4 days
The movie has collected grossed 55Crs(Appx) today
Long weekend + Solo release + Extraordinary WOM made itLooks like 100crs also possible as there is no notable release for this weekend toopic.twitter.com/Elgdizp5X9
— AmuthaBharathi (@CinemaWithAB) September 19, 2023
விஷாலின் முகல் 100 கோடி படம்:
இதனிடையே விஷால் நடித்த திரைப்படங்கள் இதுவரை 100 கோடி வசூலை எட்டவில்லை. அந்த வகையில் தற்போதுப், மார்க் ஆண்டனி விஷாலையும் 100 கோடி கிளப் ஹீரோவாக மாற்றும் என எதிர்பார்க்கின்றனர்.
பாசிடிவான விமர்சனம்..
மார்க் ஆண்டனி படத்திற்கு சினிமா விமர்சகர்கள் உள்ளிட்ட பலர் பாசிடிவாக பேசியுள்ளனர். இதுவரை பார்த்திராத புதுவித பாணியில் மார்க் ஆண்டனி படத்தின் கதை பயணிப்பதாகவும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு படத்தில் காமெடி அம்சங்கள் நிறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு தரப்பு ரசிகர்கள் படம் சுமாராக இருப்பதாகவும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும் இல்லை என்றும் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | தன் மனைவியை கலாய்த்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த அசோக் செல்வன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ