Aditi Shankar Talks About Condition By Her Father : பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். இவரை தேடி பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இவரை நடிக்க வைப்பதற்கு முன்பு ஷங்கர் சில கண்டிஷங்களை போட்டு தான் திரையுலத்திற்குள் அனுப்பினாராம்.
திரைக்கு வரும் சினிமா வாரிசுகள்!
திரையுலகில் ஸ்டார் நடிகர்களாக வரும் விளங்குபவர்களின் வாரிசுகள், சினிமாவிற்கு வருவது புதிதல்ல. சிவாஜி கணேசனின் மகன் பிரபுவில் ஆரம்பத்து, இப்போது விஜய் மகன் வரை ஜேசன் சஞ்சய் வரை அனைவரும் திரை வாரிசுகள்தான். சொல்லப்போனால், கோலிவுட்டில் தற்போது ஹிட் அடிக்கும் பல படங்களில் ஸ்டார் நடிகர்களாக இருப்பதும் இவர்கள்தான்.நடிகர்-நடிகைகளின் ஆண் வாரிசுகள் திரைக்கு வரும் போது, அவர்களுக்கு தடைகளோ, கண்டீஷன்களோ பெரிதாக இருக்காது. ஆனால், பெண் பிள்ளைகள் வந்தால் மட்டும் அவர்களின் பெற்றோர்கள் ஆயிரம் கண்டீஷன் போட்டு சினிமாவிற்கு அனப்புவர். இது போன்ற ஒரு கண்டீஷனில்தான் அதிதி ஷங்கரும் சிக்கியுள்ளார்.
திரை வாரிசுகளுள் ஒருவராக இருக்கும் அதிதி ஷங்கர், திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். இவர், தற்போது சில புதிய படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் இது குறித்து பேசியிருக்கிறார்.
அதிதிக்கு கண்டீஷன் போட்ட அவரது அப்பா..
மருத்துவம் படித்திருக்கும் அதிதி, முதன் முதலில் திரைக்கு வந்ததது விருமன் படம் மூலமாகத்தான். இதற்கு முன்னர் சில படங்களில் பின்னணி பாடகியாக இருந்திருக்கிறார். விரும்பன் படத்தில் நடித்த போது இவரை ட்ரோல் செய்யாத ஆளே இல்லை. இருப்பினும் தன்னை நோக்கி வரும் அனைத்து விமர்சனங்களையும் இன்முகத்துடன் வரவேற்று தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
2023 ஆம் ஆண்டில் வெளியான இவரது மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. அதைத் தாண்டி இவரும் சிவகார்த்திகேயனும் பாடியிருந்த, “வண்ணாரப்பேட்டையில” பாடலுக்குள் நல்ல வரவேற்பு இருந்தது. சமீபத்தில் நேசிப்பாயா என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் அவ்வளவாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படவில்லை. இந்த நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்திருக்கும் ஒரு பேட்டியில் தனது அப்பா தனக்கு போட்ட கண்டிஷன் கொடுத்து கூறியிருக்கிறார்.
அஜித்துக்கு அப்பா போட்ட கண்டிஷன்…
அதிதி சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது ஷங்கரிடம் பேசினாராம். அப்போது தனக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருப்பதாகவும் தனது விருப்பத்தை அப்பாவிடம் தெரிவித்தவுடன் அவர் மிகவும் யோசித்ததாகவும் கூறியிருக்கிறார். கடைசியாக இவரிடம் ஒரு கண்டிஷன் போட்டு இருக்கிறார் ஷங்கர். அது என்னவென்றால், “சினிமாவில் நடிக்கப் போகிறாய், அப்படி அதில் ஜெயிக்க முடியவில்லை என்றால் மீண்டும் டாக்டர் தொழிலுக்கு வந்து விட வேண்டும்” என்று தெரிவித்தாராம்.
அவர் சொன்னபடியே சினிமாவில் காலடி எடுத்து வைத்த அதிதி, இப்போது ஓரளவிற்கு பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். ஒன்ஸ்மோர் மற்றும் பைரவம் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஒன்ஸ்மோர் படத்தில் இவர் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும் படிக்க | Aishwarya Arjun : புது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?
மேலும் படிக்க | கேம் சேஞ்சர்: விஜய்க்கு ஷங்கர் போட்ட கண்டீஷன்! கேட்டவுடன் நோ சொன்ன தளபதி..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ