சுரைக்காய்: ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியம்..... பிடிக்கலைனா கூட சாப்பிடுங்க

Health Benefits of Bottle gourd: சுரைகாய் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் அபாரமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 30, 2025, 10:43 AM IST
  • எடை இழக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு சுரைக்காய் உதவும்.
  • இது உடலுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது.
  • சுரைக்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இது செரிமானத்திற்கு உதவக்கூடியதாக இருக்கின்றது.
சுரைக்காய்: ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியம்..... பிடிக்கலைனா கூட சாப்பிடுங்க title=

Health Benefits of Bottle gourd: நாம் நமது உணவின் ஒரு பகுதியாக பல வித காய்களை உட்கொள்கிறோம். ஆனால், இவற்றில் சில காய்களை பலருக்கு பிடிக்கும். சில காய்களை பொதுவாக பலருக்கு பிடிப்பதில்லை. சில காய்கள் மீது மக்களுக்கு அதிக சுவாரசியம் இருப்பதில்லை. அப்படி அதிக சுவாரசியம் காட்டப்படாத காய்களில் சுரைக்காயும் ஒன்று. பெரும்பாலான மக்களுக்கு இந்த காய் சாப்பிட பிடிப்பதில்லை என்றாலும், இதில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த காயை கறி, கூட்டு, பச்சடி, சாறு என பல வழிகளில் உட்கொள்ளலாம். சுரைகாய் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் அபாரமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Inflammation: வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது

சுரைக்காயில் வைட்டமின் சி மற்றும் பல அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இதில அதிக அளவில் தியாமின் உள்ளது. இது உடலில் வீக்கத்தைக் குறைக்கிறது. அடிக்கடி ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் நீரிழப்பு காரணமாக உடல் வீக்கத்திற்கு ஆளாகிறது. சுரைக்காய் போன்ற காய்கறிகள் வீக்கம், உப்பசம், வயிற்று அசௌகரியங்கள் ஆகியவற்றை குறைக்க உதவுகின்றன. வயிறு தொடர்பான கோளாறுகளைத் தவிர்க்க இதை ஒரு அற்புதமான இயற்கை உத்தியாக பயன்படுத்தலாம்.

Hydration: நீரேற்றமாக வைத்திருக்கும்

சுரைக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. இது கிட்டத்தட்ட 92% தண்ணீரைக் கொண்டுள்ளது. வெப்பமான காலநிலையில் இதை உட்கொள்வதன் மூலம், உடலின் நீர் சமநிலையை பராமரிக்கலாம், நீரிழப்பைத் தவிர்க்கலாம். வெப்பநிலை அதிகரிக்கும் போது இது உங்கள் உணவுக்கு ஒரு சிறந்த துணையாக அமையும். அதன் குளிர்ச்சியான பண்புகள் உடலை அமைதிப்படுத்துகின்றன. இதனால் வெப்பத்தால் ஏற்படும் அசௌகரியங்கள் குறைகின்றன.

Stomach Health: வயிற்றுக்கு சிறந்தது

சுரைக்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இது செரிமானத்திற்கு உதவக்கூடியதாக இருக்கின்றது. காய்களில் அதிக நீர்ச்சத்து இருந்தால், அது நச்சு நீக்கம் மற்றும் வெப்பக் குறைப்பிலும் உதவும். இது உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவுகிறது. மலம் கழிக்க அவதிப்படுபவர்கள் தினமும் சுரைக்காய் சாறு குடிக்கலாம்.

Skin Care, Hair Care: சரும மற்றும் கூந்தல் பாதுகாப்பு

சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து, பீனாலிக் கலவைகள், வைட்டமின்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் ஆகியவை இருப்பதால், இது கூந்தல் மற்றும் சருமத்திற்கு நல்லது. இரத்த சுத்திகரிப்பு மற்றும் உடலில் இருந்து விரும்பத்தகாத துகள்களை அகற்றி, இது உடலில் இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகின்றது. இது கூந்தலின் தரத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

Weight Loss: எடை இழப்பு

உடல் பருமனால் பதிக்கப்பட்டு எடை இழக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு சுரைக்காய் உதவும். அதில் உள்ள உணவு நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி காரணமாக, இது உடலுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. சுரைக்காயை உங்கள் உணவில் சேர்ப்பது பசியைக் குறைத்து, தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதை தடுத்து எடையை குறைக்க உதவுகின்றது. 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் தசை வலிமை வரை... புரதம் நிறைந்த சூப்பர் பழங்கள் இவை தான்

மேலும் படிக்க | இரவு உணவில் இந்த தவறுகளை செய்யாதீங்க... அது உடல்நிலையை வச்சு செஞ்சுரும்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News