சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.சுவாரசியம் குறையாமல் நேர்த்தியான திரைக்கதையுடன், நடிகர்களின் சிறப்பான நடிப்புடன் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. படம் வெளியானபோதே இந்தப் படத்துக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். என ரசிகர்கள் கணித்தனர்.
ரசிகர்கள் கணித்தபடி சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா, சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ் என மொத்தம் 5 தேசிய விருதுகளை சூரறைப் போற்று அள்ளியிருக்கிறது.
சூர்யா தேசிய விருது வென்றது எப்படி பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்ததோ அதைவிட அதிகமாகவே ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைத்தது அனைவராலும் கொண்டாடப்பட்டது. அதுமட்டுமின்றி, தன்னுடைய முதல் படமான வெயில் படத்திலிருந்தே மிகச்சிறந்த இசையை கொடுத்துவரும் ஜிவிக்கு தேசிய விருது எப்போதோ கிடைத்திருக்க வேண்டுமென்றும் பலர் கூறினர்.
Finished recording three songs for sooraraipottru Hindi remake . Will be a completely fresh album with new tunes and songs . And new bgscore … super charged about it … @Sudha_Kongara @akshaykumar @Suriya_offl
— G.V.Prakash Kumar (@gvprakash) July 24, 2022
இந்தச் சூழலில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடித்து சுதா கொங்கரா இயக்கிவரும் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் படத்துக்கு மூன்று பாடல்களை இசையமைத்து முடித்துவிட்டதாக ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மூன்று பாடல்களுக்கான ரெக்கார்டிங் முடிந்துவிட்டது. முழு ஆல்பத்தை புதிய ட்யூன்களோடு, பாடல்களோடு, புது பின்னணி இசையோடு நிறைவு செய்துவிடுவோம்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ரன்வீர் சிங் போட்ட வழியில் இப்போது விஷ்ணு விஷால் - வைரலாகும் போஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ