நடிகர் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 1870 முதல் 1940 காலகட்டத்தில் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை கதைகளை மையமாக வைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியானது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளிலும் கூட நடிகர் விக்ரம் நடிகர் விக்ரம் நீண்ட முடிவுடனும் தாடியுடனும் உடல் எடையை குறைத்து தங்கலான் படத்தின் லுக்கில் வந்திருந்தார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதற்கிடையில் கோலார் தங்க வயலில் தொடங்கப்பட்ட தங்கலான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட சூட்டிங் சென்னையில் உள்ள evp ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றது. மேலும் தங்கலான் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார் நடிகர் சியான் விக்ரம். இப்படம் கேஜிஎப் பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்து வருகிறார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் சமீபத்தில் நடிகர் விக்ரமின் காட்சிகள் எடுக்கப்பட்டபோது, அவர் கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டதோடு, விலா எலும்பும் முறிந்தது. இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு பின் தற்போது உடல் நலம் தேறியுள்ள விக்ரம், மீண்டும் தங்கலான் படப்பிடிப்பில் பங்கேற்க துவங்கியுள்ளார்.
இந்நிலையில் படப்பிடிக்காக மேக்கப் போட்டு தயாராகும் சில புகைப்படங்களை விக்ரம் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. இதில் அடையாளம் தெரியாத அளவுக்கு தாடி - மீசையோடு கண்ணம் எல்லாம் சுருங்கி, வேறு ஒரு விதமான லுக்கில் நடிகர் விக்ரம் இருக்கிறார்.
Sneak peak of our @chiyaan BTS #Thangalaan#Chiyaanvikram @beemji pic.twitter.com/40UMOdzsh0
— Chiyaan Ajith (@Chiyaanajith7) June 28, 2023
When you’re playing a character which needs 4-5 hours of makeup & costume time daily(sitting still for that long has been the biggest challenge, yes), most of the BTS photos on your camera roll tend to be these #Thangalaan
pic.twitter.com/SwemWQq1vZ— Malavika Mohanan (@MalavikaM_) June 21, 2023
இதற்கிடையில் தற்போது 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கிய நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடையும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சூர்யா படத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வசனம்..வருத்தம் தெரிவித்த உதயநிதி..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ