சென்னை: தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானவர்கள், திரைபப்டங்களிலும் நடித்து பிரபலமாகின்றனர். சிவகார்த்திகேயனை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்த தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானவர் அஸ்வின். குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் பிரபலமானார். அதையடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. தன்னுடைய முதல் படமான என்ன சொல்லப் போகிறாய் படத்தில் நடித்து வருகிறார். அஸ்வின்.
என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி (Song Release Function) சமீபத்தில் நடைபெற்றது. அப்போது அஸ்வின் பேசியவை சர்ச்சையாகியிருக்கிறது. ஒரு படம் கூட நடிக்காத அஸ்வின் ஆணவத்தில் பேசுவதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
”எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். அது போல 40 கதை கேட்டு எல்லாவற்றிலும் தூங்கிவிட்டேன்.நான் அழகா இருக்கேன் என்று நினைத்தான் என் பெற்றோருக்கு நன்றி சொல்லுங்கள். நல்லா நடிக்கிறேன் என்று நினைத்தால் எனக்கு நன்றி சொல்லுங்கள். நான் அழகாக இருக்க வேண்டும் என்று மட்டும் நினைக்கவில்லை. நல்ல நடிகனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.”
அஸ்வின் நடிக்கும் என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்துடன் மூன்று படங்களில் நடிக்க அஸ்வின் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.தனது பிசியான வேலைகளுக்கு மத்தியிலும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அஸ்வின், இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கிறார். அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அஸ்வினுக்கு ரசிகைகள் அதிகம். ஆனால் அதற்காக 40 கதைகளை கேட்டு, எல்லாவற்றிலும் தூங்கிவிட்டேன் என்று சொல்வது புதுமுகமாய் அறிமுகமாகும் நடிகருக்கு ஓவர் என்று சமூக ஊடகங்களில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வினை அனைவரும் கலாய்க்கின்றனர்.
ALSO READ | மதங்களை கடந்தவன் மாமனிதன்’ விஜய்சேதுபதி சொல்லும் சேதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR