கார் ரேஸில் வெற்றி பெற்ற அஜித்! யாரெல்லாம் விஷ் பண்ணியிருக்காங்க தெரியுமா?

Celebrities Congratulate Ajith Kumar For Winning In Car Race : நடிகர் அஜித் குமார், துபாயில் நடந்த 24H கார் ரேஸில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார். இதையடுத்து, பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

Written by - Yuvashree | Last Updated : Jan 13, 2025, 10:34 AM IST
  • துபாய் கார் ரேஸில் 3ஆம் இடம் பெற்ற அஜித்!
  • திரை பிரபலங்கள் வாழ்த்து..
  • யாரெல்லாம் விஷ் பண்ணியிருக்காங்க?
கார் ரேஸில் வெற்றி பெற்ற அஜித்! யாரெல்லாம் விஷ் பண்ணியிருக்காங்க தெரியுமா? title=

Celebrities Congratulate Ajith Kumar For Winning In Car Race : தமிழ் திரையுலகில் டாப் நடிகராக வலம் வரும் அஜித் குமார், திரைத்துறையை தாண்டி, தனக்கு பிடித்த சில விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி, சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு கார் ரேஸிலும் வெற்றி பெற்றிருக்கிறார். இதையடுத்து, பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கார் ரேஸில் அஜித்திற்கு வெற்றி!!

நடிகர் அஜித்குமார் துபாயில் நடைப்பெற்ற 24H கார் ரேஸில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவரது கார் பிரேக் கோளாறு காரணத்தால் பல்வேறு விபத்துகளை சந்தித்தது. இந்த நிலையில், அவர் அப்போட்டியில் இருந்து விலகுவதாக கூறி, 991 பிரிவில் கலந்து கொண்டார். நேற்று நடைப்பெற்ற இந்த ரேஸில் அவர் 3ஆம் இடத்தை பெற்றார்.

இதில், இந்திய கொடியுடன் அவர் பாேஸ் கொடுத்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இதையடுத்து, நாட்டிற்கே பெருமை சேர்க்கும் வகையில், அஜித் குமார் பெற்றிருக்கும் வெற்றியை திரை பிரபலங்களில் இருந்து அரசியல் பிரபலங்கள் வரை பலர் பாராட்டி பேசி வருகின்றனர்.

ரஜினிகாந்த்:

நடிகர் ரஜினிகாந்த், அஜித்தின் வெற்றி குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கூடவே, “லவ் யூ” என்றும் கூறியிருக்கிறார்.

கமல்ஹாசன்:

அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் பதிவு.

சிவகார்த்திகேயன்:

நடிகர் சிவகார்த்திகேயன், அஜித்தின் வெற்றி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

மாதவன்:

நடிகர் மாதவன், நேரிலேயே சென்று அஜித்தின் வெற்றியை கொண்டாடினார். 

மேற்கூறிய திரைபிரலபலங்கள் மட்டுமன்றி, இயக்குநர்கள் வெங்கட் பிரபு, சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உள்ளிட்ட பலர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | துபாய் கார் ரேஸில் அஜித்திற்கு 3வது இடம்!! இந்திய கொடியுடன் போஸ் கொடுத்த போட்டோஸ்..

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க அஜித் சாப்பிட்ட 2 விஷயம்! வெளியான சீக்ரெட்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News