Chennai Latest News Updates: சென்னையில் ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த இரண்டாம் ஆண்டு மார்வெலஸ் மார்கழி திருவிழா மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகை சினேகா மற்றும் அவரது கணவரும் நடிகருமான பிரசன்னா, அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியசீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகை சுகாசினி மணிரத்னம் தொகுத்து வழங்கினார். டாக்டர். பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட நடனக் கலைஞர்களும் பங்கேற்று, பாரம்பரிய நடனத்தை நிகழ்த்தினர்.
பாடகர்கள் சந்தீப் நாராயண், மகதி, சூர்யா கெய்த்ரி, அருணா சாய்ராம், ஸ்ரீரஞ்சனி சந்தனகோபாலன், ஹரி பிரியா, ஷண்முகா பிரியா, சிக்கில் குருச்சரண் உள்ளிட்டோர் சினேகாவின் சினேகாலயா சில்க்ஸ் நிறுவனம் வடிவமைத்த உடையலங்காரத்தில் ஒய்யார நடையில் பார்வையாளர்களை கவர்ந்தனர். இத்துடன் இசை, நடனம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தது பார்வையாளர்களை ஈர்த்தது.
'விஜய் நல்லது செய்வார் என நம்புகிறோம்'
அதனைத் தொடர்ந்து சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள்,"திரை உலகினரின் வாழ்க்கையில் ஏற்படும் விவாகரத்து குறித்து அறிவுரை யாரும் வழங்க முடியாது. அவர்களுக்கு என தனிப்பட்ட வாழ்க்கை என்று உள்ளது. அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்பினார்கள். கண்டிப்பாக நல்லது செய்வார் என நம்புகிறார்கள், நாங்களும் நம்புகிறோம்" என்றனர்.
மேலும் படிக்க | 37வது வயதில் நடிப்பில் இருந்து ஓய்வை அறிவித்த பிரபல நடிகர்! ரசிகர்கள் அதிர்ச்சி!
மேலும், அடுத்த நடிக்க இருக்கும் படங்கள் குறித்து சினேகாவிடம் கேள்வி எழுப்பும்போது,"இதற்கு முன் கடைசியாக பட்டாஸ் படத்தில் நடித்தேன். தற்போது 5 ஆண்டுகளுக்கு பின் The Goat படத்தில் நடித்துள்ளேன். நல்ல படம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்" என்றார்.
மேலும், இந்நிகழ்ச்சி குறித்து அவரிடம் கேட்கையில்,"மார்கழி மாதம் என்றால் கர்நாடக இசைதான் எங்கும் கேட்டு கொண்டிருக்கும். இந்த இசை பாடும் கலைஞர்களை பாரம்பரிய உடை அணிந்து பேஷன் ஷோ செய்ய வேண்டும் என்ற விஷயத்தை நம்மிடம் கொண்டு வந்தார்கள். பொதுவாக கர்நாடக இசை பாடும் நபர்களின் ஆடை மற்றும் நகைகளையும் பொதுமக்கள் கூர்ந்து கவனிப்பார்கள்" என்றார்.
அனிருத் பாராட்டு
பிரசன்னா மற்றும் சினேகா சேர்ந்து படம் நடிக்க வாய்ப்பு உள்ளதா என கேட்டபோது,"நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் ஐடியா எங்களுக்கு கிடையாது. யாரும் மோசமான படம் கொடுக்க வேண்டும், மோசமான இசை கொடுக்க வேண்டும் என உழைப்பதில்லை. அந்த காலத்து பாடல்களும், இந்த காலத்து பாடல்களையும் மக்கள் ரசிக்க தான் செய்கிறார்கள். பாடல் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும், அவர்கள்தான் நீதிபதிகள்" என்றனர்.
மார்வெலஸ் மார்கழி திருவிழாவில் இந்த ஆண்டு கணேஷ், செல்வகணேஷ் மற்றும் ராகேஷ் சௌராசியா ஆகியோருக்கு கிராமி விருதுகளையும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை பார்க்க வருகை தந்த இசையமைப்பாளர் அனிருத் கடந்தாண்டு கொண்டாட்டத்தை மிஞ்சும் வகையில் இந்தாண்டு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்றும், எதிர்வரும் ஆண்டுகளிலும் இது தொடரவேண்டும் என்றும் வாழ்த்தினார்.
ஈவென்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி, "21வது ஆண்டில் இதுபோன்ற ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சென்னையின் மிக முக்கிய பிரபலங்களை இந்நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்து மார்கழி மாதத்தின் மகத்துவத்தை கொண்டாடினோம்" என்றனர்.
மேலும் படிக்க | டிசம்பர் மாதம் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்! ஒரு மாதத்தில் இத்தனையா? முழு லிஸ்ட்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ