பிரபல இயக்குனர் இயக்கத்தில் சித்தார்த்... வெளியானது சூப்பர் அப்டேட்

சித்தார்த் 40 என்ற தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 21, 2024, 12:49 PM IST
  • இந்தியன் 2 படத்தில் சித்தார்த் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
  • சித்தா படம் பெரிய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.
  • இந்த இயக்குனர் இயக்கத்தில் சித்தார்த் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
பிரபல இயக்குனர் இயக்கத்தில் சித்தார்த்... வெளியானது சூப்பர் அப்டேட் title=

Siddharth with Sri Ganesh: 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சித்தார்த் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக இருக்கும் நடிகர் சித்தார்த், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். இதைத் தொடர்ந்து இவர் பாய்ஸ், ஆயுத எழுத்து, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சித்தா. இந்த படம் பெரிய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் சித்தார்த் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாக உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில், 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். தற்போது இந்த இயக்குனர் இயக்கத்தில் சித்தார்த் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

மேலும் படிக்க | 8 வருட இடைவேளைக்கு பிறகு..திரையுலகில் கம்-பேக் கொடுக்கும் பிரபல நடிகர்!

இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக சித்தார்த் 40 என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று  வருகிறது. அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீசியன்களின் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். சித்தா படம் போன்று சித்தார்த் கெரியரில் முக்கிய படமாக இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனிடையே சித்தார்த் படம் குறித்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் ரசிகர்களுக்கு சில அப்டேட் களை கொடுத்துள்ளார். அதன்படி இந்த படம் டிராமாவாகவும், கொஞ்சம் டிராவலாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் சித்தார்த் உடன் படம் பண்ணுவதற்கு தான் ஆர்வமாக இருந்ததாக தெரிவித்த ஸ்ரீகணேஷ், சித்தா படத்தின் வெற்றிக்கு சித்தார்த்தை வாழ்த்தி மெசேஜ் அனுப்பியதாகவும், அதன்பின்னர் ஏற்பட்ட உரையாடல்களில் இருவரும் படம் பண்ணுவதற்கு முடிவு செய்ததாகவும், சித்தார்த்துக்காக எழுதியுள்ள இந்த திரைக்கதையானது அவருக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறிய இந்த கதையை எழுதுவதில் தனக்கு அதிக சவால்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News