டென்னிஸ் விளையாட்டில் வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் விம்பிள்டன் போட்டிகள் என்பது மிகவும் மதிக்கத்தக்க ஒரு போட்டியாகக் கருதப்படுகிறது. இந்த விம்பிள்டன் போட்டிகளில் விளையாட்டு வீரர்களுக்கு கடுமையான விதிமுறைகள் உள்ளனவாம்.
அதில் முக்கியமான ஒன்று வீரர்கள் தலை முதல் கால் வரை அனைத்துமே வெள்ளை நிறத்தில் அணிந்து இருக்க வேண்டும் என்பதுதான். Head cap, Wrist Band, socks, shoes என எதற்கும் விதிவிலக்கு இல்லையாம். இந்த வெள்ளை நிற விதிமுறை வீரர்களின் உடைகளுக்கு மட்டுமல்ல, அங்கு அவரசத்திற்கு கொண்டுவரப்படும் மருத்துவ உபகரணங்களுக்கும் தான்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அணிந்திருந்த ஷூவின் அடிப்பாகம் பளிர் ஆரேஞ்சு நிறத்தில் இருந்ததே அப்போதைய விம்பிள்டன் அதிகாரிகளை சற்று கொபமடைய வைத்ததாம்.
மேலும் படிக்க | ஹர்திக்கின் அதிரடியில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி!
1880-களில் எழுத்தப்பட்ட இந்த விதிமுறைகளால் இன்று வரை பெண்கள் சில சொல்லப்படாத கஷ்டங்களை சந்தித்து வருகின்றனராம். மாதவிடாய் நேரத்தில் இந்த வெள்ளை நிற ஆடை அணிகலன்களை அணிய வேண்டும் என்ற பெரும் பிரச்சனை பெயரிடப்படாமலேயே இருந்து வருகிறது.
பல பெண் வீராங்கணைகள் தங்களது விளையாட்டின்போது மாதவிடாய் வலி மற்றும் அடி வயிற்று தசைப்பிடிப்பு ஆகிய பிரச்சனைகளால் ஆட்டத்தையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதிலும் வெள்ளை நிற ஆடைகளுடன் ரத்தப்போக்கை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும் அல்லவா.
அண்மையில் டுவிட்டரில் டேவிட் லா (David Law) என்ற டென்னிஸ் கமெண்டர், ஆட்டத்தின்போது மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் எதிர்கொள்வது குறித்து தனது 25 வருட அனுபவத்தில் யோசித்தது கூட இல்லை என டுவீட் ஒன்றை பதிவிட்டார்.
Definitely something that affects female athletes! Finally bringing it to everyone’s attention! Not to mention the mental stress of having to wear all white at Wimbledon and praying not to have your period during those two weeks. https://t.co/PzyHnPlSJk
— Monica Puig (@MonicaAce93) May 31, 2022
அதற்கு பதிலளித்த போர்டோ ரிக்கோ டென்னிஸ் வீராங்கனை மோனிகா புக் (Monica Puig), "கடைசியாக அனைவரின் கவனத்திற்கும் இந்த பிரச்சனை கொண்டுவரப்பட்டுள்ளது! விம்பிள்டனில் பெண் வீராங்கணைகள் வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டி இருப்பதால், போட்டி நடக்கும் 2 வாரங்களில் மாதவிடாய் வரக்கூடாது என்ற மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிட தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
அதேபோல் பிரிட்டிஷ் டென்னிஸ் வீராங்கணை அலிசியா பார்நட் (Alicia Barnett), "சில பாரம்பரியங்கள் மாற்றப்படாது. நான் பெண்களின் உரிமைக்காக போராடுபவள். இந்த தலைப்பு குறித்து சிலர் குரல் கொடுப்பதே மிகவும் அற்புதமான ஒன்றாக கருதுகிறேன். தனிப்பட்ட முறையில் வெள்ளை நிற ஆடை அணியும் பாரம்பரியத்தை நான் மதிக்கிறேன். ஆனால் மாதவிடாய் நேரத்தில் டூர் செல்வதே போதுமான மன அழுத்தத்தை தரும். அதுவும் வெள்ளை ஆடைகளுடன் செல்ல வேண்டும் என்றால் அந்த மன அழுத்தத்தை பற்றி பேச வார்த்தைகளே இல்லை." என்று தெரிவித்தார்.
ஆஸ்ரேலிய டென்னிஸ் வீராங்கணை டேரியா சவில்லே (Daria Saville), விம்பிள்டன் போட்டிகளுக்காக தனது மாதவிடாயையே மருந்துகளை உட்கொண்டு தள்ளிப்போடுவதாக கூறியுள்ளது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு பெண்களின் கண்ணுக்கு புலப்படாத பிரச்சனையான மாதவிடாய் பிரச்சனையால், சாதனை படைக்கும் வாய்ப்பானது எட்டும் தூரத்தில் தட்டிப்போகிறது என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆடை விதிமுறையால் ஒருவரின் வெற்றி வாய்ப்பு கைவிட்டு நழுவக்கூடாது என்றும் பலர் இணைய தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். காலம் தாழ்ந்து பேசப்படுகிற இந்த பிரச்சனைக்காக விம்பிள்டன் நிர்வாகம் சற்று மனம் தளர்த்தி விதிமுறைகளை மாற்றி அமைக்குமா அல்லது பாரம்பரியம்தான் முக்கியம் என அப்படியே விட்டு விடுமா என்ற கருத்துகணிப்புகளும் இணையத்தில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க | டிராவிட் இருக்கும்போது நான் பயிற்சியாளர் ஆகியிருக்கக்கூடாது - ரவிசாஸ்திரி ஓபன்டாக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR